Monday 4 August 2008

அறியாமை ????

சில தினங்களுக்கு முன் ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .கணவர் சொன்னார் எங்களிருவருக்கும் ஹச் .ஐ.வி உண்டு .ஆனால் இது பற்றி என் மனைவிக்கு தெரியாது .என் குழந்தையும் கூட பாதிக்கப்பட்டுள்ளது .
நாங்கள் மூவரும் நோய்க்கான எ.ஆர்.டி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எப்படி இந்த பெண் எதற்கென்று தெரியாமலேயே சில நாட்கள் அல்ல நான்கு வருடங்கள் மருந்து சாப்பிட முடியும்?
தான் சாப்பிடுவது மட்டுமல்லாமல் தன் குழந்தைக்கும் கொடுக்க அனுமதிக்க முடியும் ?
ஏன் இவள் ஒருமுறை கூட தன் கணவனிடமோ வேறு எவரிடமோ இவை எதற்கான மருந்துகள் என்று கேட்கவில்லை ?


இதில் அறியாமையை விட அலட்சியமே அதிகம் .
ஒன்று இந்த பெண் உலகமே அறியாத அப்பாவியாக இருக்க வேண்டும்
இல்லை உண்மையை தெரிந்து கொண்டே அதை சந்திக்க பயந்து போய் ' கணவன் கொடுத்தான் ' என்ற முக்காடின் பின் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் .




2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களின் பெயர்க்காரணம் பதிவில் பின்னூட்டம் போடமுடியவில்லை..அதனால் இங்கே போட்டுக்கிறேன்.. என் பெயரின் ழி க்கும் இதே பாடு தான் இங்கே...ஷின்னு தான் படிப்பாங்க.. :)
விழியைப் பெயரில் வச்சிக்கிட்டு கண்ணாடிக்குள் விழியை வைத்திருக்கிறேன்.. :)

பூங்குழலி said...

உண்மை தான் கயல்விழி ...ழகரத்தை ஆங்கிலத்தில் எழுதுவதில் குழப்பங்கள் இருக்கின்றன .'zha'யார் கண்டுபிடித்ததோ தெரியவில்லை .ஆனால் ஏன் 'tamizh'என்று எழுதாமல் 'tamil'என்று எழுதுகிறோம் ?