Wednesday 1 October 2008

பொம்மைகள்

என் மகனுக்கென
வாங்கியதாய்,
என் வீடு முழுவதும்
கிடக்கின்றன.....
வண்ண வண்ண பந்துகள்
ஓடும் கார்கள்
பேசும் கிளிகள்
பம்பரங்கள்
அம்புகள்
பிளாஸ்டிக் வீடுகள் என
சிறு வயதில்
நான் விரும்பிய
விளையாட்டு பொம்மைகள்


1 comment:

ஆயில்யன் said...

//சிறு வயதில்
நான் விரும்பிய
விளையாட்டு பொம்மைகள் //

ஆமாங்க நான் கூட அக்கம்பக்கத்து வீடுகள்ல இருக்கற பொம்மைகளை பாவமா பார்த்துட்டு பெருமூச்சு விட்டு திரும்புவேன் இப்ப எல்லாம் நினைச்சா ஒரே ஃபீலிங்க்ஸா இருக்கு! (அப்பெல்லாம் நம்ம பெற்றோர்கள் எதோ ஒரு இனம்புரியாத கண்டிஷனாவே வளர்ந்துப்புட்டாங்க போல!!!!)