Thursday, 3 September 2009

எங்காவது


எங்காவது நிச்சயம் இருக்கத்தான் வேண்டும்
பார்த்திராத முகமும் கேட்டிராத குரலும்
ஒரு பதில் எனக்கு தராத ,
பதிலே தந்திராத ஒரு இதயமும் ...ஐயோ பாவம் நான் ....

எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
கடல் தாண்டி நிலம் தாண்டி விழிபரப்பும் தாண்டி
திசையற்று திரியும் நிலவுக்கப்பால் -அதை
இரவிரவாய் தொடரும் விண்மீன்களுக்கப்பால்



எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
தடுக்க ஒரு சுவரோடும் ஒரு வேலியோடுமட்டும்
பசும்புல்வளர்ந்த விரிப்பில் விழுந்து கிடக்கும்
இறந்துகொண்டிருக்கும் வருடத்தின் இறுதி இலைகளோடு மட்டும்


Somewhere or Other
by Christina Rossetti

Somewhere or other there must surely be
The face not seen, the voice not heard,
The heart that not yet - never yet - ah me !
Made answer to my word.

Somewhere or other, may be near or far ;
Past land and sea, clean out of sight ;
Beyond the wandering moon, beyond the star
That tracks her night by night.

Somewhere or other, may be far or near ;
With just a wall, a hedge, between ;
With just the last leaves of the dying year
Fallen on a turf grown green.


5 comments:

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க....ரசித்தேன்!

//
எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
கடல் தாண்டி நிலம் தாண்டி விழிபரப்பும் தாண்டி
திசையற்று திரியும் நிலவுக்கப்பால் -அதை
இரவிரவாய் தொடரும் விண்மீன்களுக்கப்பால்//

இப்படி கற்பனை செய்றதும் சுகமாத்தான் இருக்கு! :-)

க.பாலாசி said...

//திசையற்று திரியும் நிலவுக்கப்பால் -அதை
இரவிரவாய் தொடரும் விண்மீன்களுக்கப்பால்//

அருமையான மொழீயாக்கம்...

//இறந்துகொண்டிருக்கும் வருடத்தின் இறுதி இலைகளோடு மட்டும்//

அழகான ஆழம் பொருந்திய வரிகள்...

தொடருங்கள் வாழ்த்துக்கள்...

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க....ரசித்தேன்!

//
எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
கடல் தாண்டி நிலம் தாண்டி விழிபரப்பும் தாண்டி
திசையற்று திரியும் நிலவுக்கப்பால் -அதை
இரவிரவாய் தொடரும் விண்மீன்களுக்கப்பால்//

இப்படி கற்பனை செய்றதும் சுகமாத்தான் இருக்கு! :-)
//

எஸ் !

எஸ்!!

பூங்குழலி said...

இப்படி கற்பனை செய்றதும் சுகமாத்தான் இருக்கு! :

ஆமாம் சந்தமுல்லை ,அப்படி இருந்தா எப்படி ஒரு ஏகாந்தமா இருக்கும் ?

எஸ்,ஆயில்யன்,எஸ்

பூங்குழலி said...

வாழ்த்துகளுக்கு நன்றி பாலாஜி