Saturday, 13 February 2010

கோலமும் நானும் பாட்டியும்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ,நேரம் கிடைக்கும் போது பகலிலோ மாலையிலோ கோலம் போடுவது வழக்கம் .எப்போதும் பெரிய கோலங்களை தான் போடுவேன் .இது நேரம் ஆகும் என்பதால் சுற்றி சுற்றி உட்கார்ந்து மெதுவாக போட்டுக் கொண்டிருப்பேன் .

இப்படி ஒருநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன் .வசதியாக உட்கார்ந்து கோடுகளை இழுத்துக் கொண்டிருந்தேன் .மாடியில் வீட்டில் இருந்த பாட்டி ,நான் பாதி கோலத்தில் இருக்கும் போது இறங்கி வந்து படிக்கட்டில் உட்கார்ந்தார் .ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் .

நான் கோலத்தில் ஒரு பக்கம் முடித்துவிட்டு இன்னொரு பக்கம் சென்று உட்காரப் போனேன் .உடனே சட்டென்று ,"கோலத்த நின்னுகிட்டு இழுளா ,சப்பாணி பொம்பள மாதிரி ஒக்காந்து இழுக்கா .நேரா நின்னுக்கிட்டு இழு ,"என்றார் வேகமாக .நான் உடனே ,"நின்னுக்கிட்டே கோலம் போட்டா கால் வலிக்கும் பாட்டி "என்றதும் "ஆமா ,இப்படி கெழவி கணக்கா ஒக்காந்துட்டே இழுத்தா தான் வெளங்குமோ?கத்தி போல நின்னுக்கிட்டு இழு "என்றார் மீண்டும் .

அன்றிலிருந்து கோலம் போடும் போது முடிந்தவரை நின்று கொண்டு தான் போடுகிறேன் . நின்று கொண்டு புள்ளி வைக்கும் போது அது ஒரு சீராகவும் விழுகிறது ,கோலமும் முழுமையாக சமமாக இருக்கிறது .


3 comments:

சகாதேவன் said...

ஒரு கோலம் போட்டு பதிந்திருக்கலாமே?
அடுத்த பதிவில் போடுங்கள்.

அகல்விளக்கு said...

ஏதாவது ஒரு கோலத்தின் படத்தையும் போட்டிருக்கலாம்.....

நல்லாருக்கு உங்க ஐடியா..

பூங்குழலி said...

கண்டிப்பாக செய்கிறேன்