என் மகனின் பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள் இவை .
1.ஓபன் ஹவுசிற்கு, என் மகனுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை வந்திருந்தார் .அவன் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக பெற்றிருப்பதாக ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் .ஆசிரியர் "அவன் இந்த டெர்ம் முழுவதும் நிறைய நாட்கள் வரவில்லை .லீவ் லெட்டரும் கொடுக்கவில்லை .பெற்றோரை அழைத்து வா என்று சொன்னேன் ."என்று சொன்னார் .அந்த தந்தையோ இல்லை அவன் ஒரு நாளோ இரண்டு நாளோ தான் லீவ் போட்டிருக்கிறான் என்று சொன்னார் .ஆசிரியர் ரெஜிஸ்டரை காட்டினார் .மகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான் .அவர் ஆசிரியரையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் முகத்தில் அவமானம் +அதிர்ச்சி +ஏமாற்றம் .
2.பள்ளி வாசலில் காலையில் ஒரு மாணவி ,ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம் . காரில் வந்து இறங்கினாள் .கார் போகும் வரை கேட்டருகே நின்று கொண்டிருந்தாள் .ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும் வேகமாக வெளியே வந்தவள் ,எதிர் திசையில் நடந்து போய்விட்டாள்.எதிரே இருக்கும் கடைக்கு போகிறாளோ என்று பார்த்தால் கடையையும் தாண்டி ரோட்டை கடந்து போய்விட்டாள் .
3.பள்ளிவிட்ட பிறகு ,ஆட்டோவுக்கு வந்தாள் ஒரு சிறுமி .எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் .ஆட்டோ ஓட்டுனர் ,அந்த சிறுமியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் .இன்னமும் சிலர் வரவேண்டும் போலும் .பேசிக் கொண்டிருந்த போதே கிச்சுகிச்சு மூட்டுவது போல் விளையாடினார் .அங்கே இங்கே தொட்டுக் கொண்டு .உடன் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ,விஷமச் சிரிப்புடன் .
Saturday, 20 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
:(
தப்புத்தான் தப்புத்தான்
பயமா இருக்கு
//அவர் ஆசிரியரையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் முகத்தில் அவமானம் +அதிர்ச்சி +ஏமாற்றம் .//
என் வீட்டுக்கு பக்கத்து வீட்லயும் இதுமாதிரி நடந்திருக்குங்க...வருத்தமாத்தான் இருக்கு...
இரண்டாவது விசயத்தப்பத்தி ஒண்ணும் சொல்ல முடியலங்க... வேதனை...
:-(
பயத்தை சரியாக காட்டியிருக்கீர்கள்...
நம் குழந்தையிடம் உலகத்தை எப்படி அறிமுகபடுத்துகிறோம் என்பதில் தான் எல்லாமே தொடங்குகிறது...
குழந்தைகளிடம் நாம் நட்பாக இல்லாதவரையில் இதைத் தவிர்க்க முடியாது. மேலும் நம் குழந்தைகளின் தோழர் தோழியரிடமும் நாம் நட்பாக இருப்பது அவசியம். அப்பொழுதுதான் நம் குழந்தைகள் நடவடிக்கைகளில் ஏதேனும் மாறுதல் இருந்தால் நம் கவனத்திற்கு வரும்.
நமது குடும்பச் சூழல், வருமானம், செலவினங்கள் பற்றிய அடிப்படிப் புரிதல் ஏதுமற்றுக் குழந்தைகளை வளர்த்துவதும் தவறு.
நினைக்கவே நடுங்குது!!
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி வடகரை வேலன்
எவ்வளவு தூரம் நாம் விலகி நிற்கிறோம் இந்த இயந்திர உலகில் என்று புரிகிறது..
Post a Comment