Friday, 7 May 2010

வீடு விட்டு வீடு வந்து

ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னோட ஹவுஸ் ஓனர்,நா இருக்கிற வீட்டுக்கு அவங்களே குடி வர்ற போறதால வீடு வேணும்ன்னு சொல்லிட்டாங்க .மூணு மாசம் டயம் வேற கொடுத்தாங்க .வீடோ பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு,விளையாட அப்பார்ட்மென்ட் உள்ளேயே நெறைய எடம் வேற .பெரிய பையன் பத்தாவது வேற ,சரி இப்பதைக்கு இங்கேயே வேற வீடு பாக்கலாம் (மொத்தமா நாப்பத்தி எட்டு வீடு இருக்கு )ன்னு முடிவு செஞ்சோம் .


வசதியா ரெண்டு வீடு வேற காலியாச்சு .ஏப்ரல் ,மே மாசத்துல நெறைய பேரு வீடு மாறுவாங்க போல .யார பாத்தாலும் அங்க வீடு காலியா இருக்கு இங்க வீடு காலியா இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க .ஹிந்து ,அந்த டைம்ஸ் ,இந்த டைம்ஸ் ன்னு நேரிய பேப்பர வேற பாத்துகிட்டே இருந்தோம் .(ஹிந்துவில வர்ற வாடகைஎல்லாம் கொடுக்க எப்படி கட்டுபடி ஆகும்ன்னே புரியல ).அதுக்குள்ளே இங்கேயே ஒரு வீட பேசி முடிச்சிட்டோம் .


மே ஒண்ணாம் தேதி ரெண்டாம் தேதி தொடர்ந்து ரெண்டு நாள் விடுமுறையா வரதால அன்னிக்கே வீட மாத்திரலாம்ன்னும் முடிவு செஞ்சோம் .நா இருக்கிற வீடு கிரவுண்ட் ப்ளோர் .இது எதிர் ப்ளாக் ,first ப்ளோர் .பாக்கேர்ஸ் அண்டு மூவர்சுக்கு போன்ல கேட்டா ஐயாயிரம் பத்தாயிரம்னு சாதரணமா சொன்னாங்க .சரி இது சரியா வராதுன்னு ,வாட்ச்மேன் அப்புறம் அவருக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேர வச்சி மாத்திரலாம்ன்னு ஏற்பாடு ஆச்சு .ஏதோ கொஞ்சம் சாமான் ,ஒரு சோபா ,ஒரு கட்டில் ,பிரிட்ஜ் ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன் ,பாத்தா தோண்ட தோண்ட சாமானா வந்துகிட்டே இருக்கு .வெள்ளம் வரப்ப எல்லா இடத்தையும் ஒடச்சிகிட்டு தண்ணி வருமே அத மாதிரி .வந்துக்கிட்டே இருக்கு .இதுல கண்ட கான்பிரன்ஸ்லேயும் கொடுத்த பை வேற ஒரே மாதிரி ,பத்து பதினஞ்சாவது இருக்கும் . நாலு மணி நேரம் முழுசா ஆச்சு சாமான எடுத்து முடிக்க .


புது வீட்டுல போயி கொஞ்சம் கொஞ்சமா அடுக்க ஆரம்பிக்கலாம்ன்னு போனா ,அது இப்ப ஒரு குப்ப மேடு மாதிரி இருக்குது .அத பாத்தவுடனே இந்த வீடு எனக்கு பிடிக்கலன்னு தோணிச்சு .பழைய ஹவுஸ் ஓனர் மேல எக்கச்சக்கமா கோவம் வந்துச்சு .எங்க ஆரம்பிக்கிறதுன்னே தெரியல.தல கால் புரியாம ஒரு குப்ப மேட்டுல நிக்கிற மாதிரி இருக்குது .கால் வலி வேற .இதுக்குள்ள சாப்பாட வச்சி சாப்பிட கூட எடமில்லாம குப்பை எல்லா எடத்திலேயும் .அதிலேயே நடுவில ஒரு சின்ன எடத்த கிளியர் பண்ணி சாப்பிட்டு முடிச்சாச்சு .


கொஞ்சம் நிதானமா யோசிச்சப்ப ,சிக்கல்ல நூல் நுனிய கண்டுபிடிச்ச மாதிரி, ஒவ்வொருத்தார் துணியா எடுத்து அடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்ன்னு தோணிச்சு . அத ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா தெளிவாக ஆரம்பிச்சுது .துணிய முடிச்சாச்சு .அடுத்தது புக் .ஒரு சின்ன லைப்ரரி அளவுக்கு புக் இருந்துது .அத எல்லாத்தையும் சாக்கில அள்ளி நடு ஹாலில கொட்டியிருந்தாங்க .அத பிரிச்சு எடுக்கறதுக்குள்ள ....சொல்லவே முடியாது அத்தன கஷ்டம்.மேலெல்லாம் தூசி ... (புக்கெல்லாம் லைப்ரரியில எடுத்து படிக்கிறதோட நிப்பாட்டிக்கனும்ன்னு நெனைக்கிறேன் )இத ஒதுங்க வச்சி ஹால் கண்ணுக்கு தெரியவே ரெண்டு மணிநேரம் ஆச்சு .


கிட்சனுக்குள்ள போனா சின்க் ஒழுகுது .எல்லா பக்கமும் மேடை சின்னதா தெரியுது .எந்த பக்கம் அடுப்ப வைக்கிறதுன்னு மூளைய கசக்கி யோசிச்சு வைக்க வேண்டியதா இருந்துது (அதுக்கப்புறம் அத மறுபடியும் மாத்தியாச்சு ) .அத எனக்கு வேல செய்யற பொண்ணே முழுசா அடுக்கிட்டா (அவளுக்கு வேண்டாம்ன்னு தோணினதை எல்லாம் அவளே வெளியே போட்டுட்டா ).


இப்படி ஒண்ணொண்ணா சரி பண்ணிக்கிட்டே வந்தோம் .ஒரு வழியா எல்லாம் கிட்டத்தட்ட சரி பண்ணியாச்சு .இன்னமும் கொஞ்சம் சாமான் வெளிய கெடக்குது .அதில பாதி வெளிய போட வேண்டியது தான் (ஏன் இன்னமும் போடலைன்னு கேக்காதீங்க ...பாசம் தான் ).ஆனாலும் சொந்த வீடு இல்லாம இருக்குறது ரொம்ப கஷ்டம் .ஒரு தடவ மாறினதே இத்தன ரோதனையா போச்சு மூணு வருஷத்துக்கு ஒரு முறை வருஷத்துக்கு ஒரு முறைன்னு ஊர் ஊரா போறவங்க எப்படி சமாளிக்கிறாங்களோ ? ..அடுத்த முறை வீடு மாறினா அது சொந்த வீட்டுக்கா தான் இருக்கணும் .....


4 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா இயல்பா சொல்லியிருக்கீங்க..எனக்கும் அப்படிதான் தோணும்..அதுவும் எனக்கு எல்லா பொருள் மேலயும் தேவையற்ற ஒரு செண்டிமெண்டல் அட்டாச்மென்ட்....:-(


தங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகிறேன்! :-)

ஆயில்யன் said...

//அடுத்த முறை வீடு மாறினா அது சொந்த வீட்டுக்கா தான் இருக்கணும் ....//

அப்படி முடிவெடுங்க :)

செண்டிமெண்ட் அட்டாச்மெண்ட் தான் எல்லா இடத்திலயும் ஒரு பிரச்சனையாவே வருது போல :( இதை முதல்லா காலி பண்றதுக்கு ஒரு வழியை ஆண்டவன் காட்டணும் :)

பூங்குழலி said...

/ரொம்ப நல்லா இயல்பா சொல்லியிருக்கீங்க/
நன்றி சந்தனமுல்லை

/எல்லா பொருள் மேலயும் தேவையற்ற ஒரு செண்டிமெண்டல் அட்டாச்மென்ட்....:-(/

ஆமாம் ,யோசிச்சு பாத்தா அதிசயமா தான் இருக்கு ...எதையும் தூக்கி போடணும்ன்னு தோணவே மாட்டேங்குது .பின்னால தேவைப்படும்மோன்னே தோணுது ...சுத்தம் செய்யற வேல கஷ்டம் தான்

பூங்குழலி said...

/ அப்படி முடிவெடுங்க :)/
நன்றி ஆயில்யன் ...உங்க ரெண்டு பேரோட வாழ்த்தும் பலிக்கட்டும்

/செண்டிமெண்ட் அட்டாச்மெண்ட் தான் எல்லா இடத்திலயும் ஒரு பிரச்சனையாவே வருது போல :( இதை முதல்லா காலி பண்றதுக்கு ஒரு வழியை ஆண்டவன் காட்டணும் :)/

இப்ப இருக்கிறதா விட சின்ன வீடா கிடைச்சா ,செண்டிமெண்ட் காலியாயிருமோ என்னவோ ?இல்லேன்னா நெறைய பணம் கிடச்சுதுன்னா பழசெல்லாம் தூக்கி போட்டுட்டு புதுசு புதுசா வாங்கிக்கலாம் :)