அப்புறம் காலேஜ் வந்தப்ப தான் ,கிரீட்டிங் கார்டு எல்லாம் பெரிசா வந்திச்சு .இருக்கிற நாலு கடையில தேடி ,மனச தொடுற கண்ண பிழியுற மாதிரி விஷயமா எழுதியிருக்கிற கார்டை வாங்கிக் கொடுக்கிறதே ஒரு பெரிய ஹாபியா இருந்துது .இது பத்தாதுன்னு நாமளே கலர் பண்ணி ,கூட நாலு லைன் எழுதி...யாருக்காவது பிறந்தநாள் ,வந்தாலே நம்மளோட கலை ஆர்வம் கரை புரண்டிரும் (அப்படி வந்த சில கார்டு இன்னும் கூட எங்கிட்ட உண்டு ,கொடுத்த தோழிகள் கூட தான் தொடர்பு இல்லாம போச்சு ) .காலேஜுல ஒரே ஒரு தடவ என் தோழிகளுக்கு டிரீட் கொடுத்தேன் .ஒண்ணும் பெரிசா இல்ல ஒரு ஐஞ்சு பேருக்கு காலேஜுக்குள்ளேயே கூல் டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தேன் .அப்பவும் நா குடிச்ச பாட்டில் ஒடஞ்சி அதுக்குள்ளே ரெண்டு எறும்பு வேற செத்துக் கெடந்தது .கடைக்காரர் பயந்து போயி இன்னொன்ன ப்ரீயா கொடுத்தார் (பரிசா கொடுத்தார் ?).
இப்பவெல்லாம் நம்ம பிறந்தநாளை யாராவது ஞாபகம் வச்சுகிட்டு போன் பண்ணினா கூட சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் .சில பேர் ,இத நினைவு படுத்த வலைத்தளங்கள் இருக்காமே ,அங்கிருந்து சொல்லிடறாங்க .சில கடையில எழுதி வச்சுட்டு வந்தா ,ஞாபகமா கார்ட் அனுப்பிடறாங்க .வீட்டுல இருக்கவுங்க அடிச்சி பிடிச்சி நாள் முடியறதுக்குள்ள எப்படியோ ஞாபகம் வந்து ,திட்டு வாங்குறதுக்குள்ள வாழ்த்தி எஸ்கேப் ஆறாங்க .
இது என்னோட பிறந்தநாள் பிளாஷ்பேக் . ஆனா நா சொல்ல வந்த மேட்டர் வேற .இப்ப பாத்தா பிறந்தநாள் கொண்டடலைனா பிள்ளைகளுக்கே தாழ்வு மனப்பான்மை வந்திரும் போல .என்னோட அபார்ட்மென்டுல நாப்பத்தி எட்டு வீடு இருக்கு ,இதுல ஒரு இருவது குட்டிகளுக்கு வயசு பத்துக்கு கீழ .மாசத்துக்கு ஒரு பிறந்தநாள் பார்ட்டியாவது வருது .இதுல ஒருத்தர் வைக்கிறாங்கன்னே மத்தவங்களும் வைக்க வேண்டியதா இருக்கு .போன வருஷம் என்னோட மகனுக்கு பார்ட்டி வச்சப்ப ,வந்த பிள்ளைகள் கிட்ட ,"ஏதாவது கேம் விளையாடலாம் ,என்ன கேம் நீங்களே சொல்லுங்க "ன்னு சொன்னவுடனே , ஒரு குட்டி வேகமா சொல்லிச்சு ,"ஆண்ட்டி என்ன ரிடர்ன் கிப்ட்டுன்னு கெஸ் பண்ணலாம் ."இப்படி ஒரு விளையாட்டா ? ன்னு யோசிக்கிறவுங்களுக்கு எல்லாம் ,ரிடர்ன் கிப்ட் இல்லாம பார்ட்டி வச்சா ,பிள்ளைகளே பார்ட்டிய பாய்காட் பண்ணிடும்.
இது கூட பரவாயில்ல ,ஸ்கூல கூட படிக்கிறவங்களுக்கு கிப்ட் கொடுக்கறது ஒரு பேஷனாகி வருது .ஆளாளுக்கு என்னென்னவோ கொடுக்கறாங்க .ரெண்டு நட்ராஜ் பென்சில ,ஒரு ரப்பர் இத செல்லோ டேப்புல ஒட்டி கொடுக்கிறதுல இருந்து என்னென்னவோ .போன வாரம் என் பையன் வகுப்புல ஒரு பையன் கொடுத்தது என்ன தெரியுமா ?அவன் பேர் போட்ட சின்ன பேன்சி பேக் ஒண்ணு.வகுப்புல மொத்தம் நாப்பத்தி ஐஞ்சு பிள்ளைங்க ,ஒரு பை அம்பது ரூபாயின்னு வச்சா கூட ,கண்ண கட்டுது சாமி.
ஸ்கூல் இதெல்லாம் தடை பண்ணனும் .மூணாங் கிளாசுல இப்படி பெரிசா கொடுக்கிறவன் பணக்காரன் ,சின்னதா கொடுக்கிறவன் கஞ்சன் .கொடுக்காதவன் ஏழைன்னு இல்ல தப்பு பூவர் ன்னு ,பிள்ளைங்க அரிச்சுவடி படிச்சா .....எங்க போயி முடியும் ?
3 comments:
உங்க பிறந்த நாள் எப்போன்னு தெரியல. எனிவே நல்வாழ்த்துகள்.
கடைக்காரர் பயந்து போயி இன்னொன்ன ப்ரீயா கொடுத்தார் (பரிசா கொடுத்தார் ?).
கலகலப்பாய் பதிவு.
இப்படி எல்லாமா ஆரம்பிச்சுட்டாங்க? சாக்லேட் கூட கொடுத்ததில்ல.. ஆனா க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் ஏதாச்சும் வாங்கிச் சாப்பிடுவோம். அந்த சந்தோஷமே தனி.
ஆமாம் ரிஷபன் ,பிள்ளைக்கு பிறந்தநாள் வந்தாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு
ஆமாம் ரிஷபன் ,பிள்ளைக்கு பிறந்தநாள் வந்தாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு
Post a Comment