Saturday 9 October 2010

எந்திரன்

ஒருவழியாக எந்திரன் பாத்தாச்சு.பாத்துட்டு அத பத்தி எழுதலைன்னா எப்படி ?அதான் இந்த பதிவு .

ஆச்சரியங்கள்
சிட்டி ரஜினி ...கலக்கல்ன்னு மட்டும் சொல்லிட்டா பத்தாது .அதுவும் அந்த மேன்னு ஆடு மாதிரி ...அனுமதி கிடைச்சிருந்தா விசில் அடிச்சிருக்கலாம் .
வசி ரஜினி .நிறைய காட்சிகளில் ஸ்மார்ட் +ட்ரிம் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்?)
ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டருல பரபரப்பா நிறைய கூட்டம் ..நன்றி :ரஜினி +ஐஸ் + திகட்ட வைத்த மார்க்கெட்டிங்
இன்ட்ரோ பாட்டு இல்லாத ரஜினி அறிமுகம் ,(சிடியில் எஸ்.பிபி குரலில் வந்த பாடலை கேட்டப்ப இது இன்ட்ரோவா இருக்க முடியாதே தோணிச்சு .ஆனா சென்டிமென்ட் வாழ்க )
கடைசி சண்டை காட்சிகள் +ஸ்பெஷல் எபெக்ட்ஸ்

ஏமாற்றங்கள்
பாடல்கள்
கிளிமஞ்சாரோ பாட்டுக்கு ஆடுனத பத்தி சன் டிவியில ரஜினி பேசிகிட்டே இருந்தார் .ஆனா படத்துல பாத்தா ...பாத்தா ...பாத்து தெரிஞ்சுக்கோங்க
ஐஸ் காஸ்ட்யூம்ஸ் +மேக்கப் ..இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம் .
வில்லன் டேனி ..பாழடைந்த பில்டிங்கில் விடியோ கேம்ஸை போட்டுக் காட்டி ,கட்டுகட்டாக பணம் வாங்கி ...கொடுமைடா சாமி .. ?
ரஜினி ஐஸ் வர நிறைய கட்சிகள் ரெண்டு பேரையும் தனித்தனியா வச்சு எடுத்த மாதிரியே இருக்கு ?கெமிஸ்ட்ரி ?
என்னதான் ஐஸ்வர்யா ராயே காதலியா கெடச்சாலும் இப்படியா ஒரு ஆள் கூட கண்காணிப்புக்கு இல்லாம ரெண்டு நாள் தன்னோட ரோபோவ அனுப்பி விடுவார் ஒரு சயன்டிஸ்ட் ?

முக்கிய செய்திகள் :
ஐஸோட நடிக்கணும்ங்கற ரஜினியோட படையப்பா காலத்து ஆசை நிறைவேறியிருக்கு
நிறைய பேர கை கழுவி விட்ட ஒரு ப்ராஜெக்ட்ட ஷங்கர் ஒரு வழியா முடிச்சு காட்டிட்டாரு

மொத்தத்துல சொல்ல ஒண்ணும் பெருசா இல்ல ...ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம போனா ஒரு தடவ ஜாலியா பாத்துட்டு வரலாம்


4 comments:

ஆயில்யன் said...

//அந்த மேன்னு ஆடு மாதிரி ...அனுமதி கிடைச்சிருந்தா விசில் அடிச்சிருக்கலாம் //

&

//மெய்ப்பொருள் காண்பதறிவு//

:) சூப்பர் !

பூங்குழலி said...

அந்த காட்சி அக்மார்க் ரஜினி முத்திரை .படத்தில் நிறைய இடங்களில் ரஜினி காணாமல் போனதில் அவரின் ரசிகையாக வருத்தம் எனக்கு . ரொம்ப நன்றி ஆயில்யன்

Jerry Eshananda said...

ரஜினி ரசிகர் மன்ற தலைவிக்கு வணக்கம்,நல்ல வேளை...கதைய சொல்லல..

பூங்குழலி said...

அய்யய்யோ ..மன்றத் தலைவி எல்லாம் இல்ல .... ஒரு சின்ன ரசிகை தான் .கதைய சொல்லலை .ஆமா ,சொல்ல என்ன இருக்கு ?சாதாரண மசாலா கதை தான் .ஹை -டெக் மசாலா