Thursday 10 March 2011

தேர்தல் மேடை -1

இரண்டு நாட்களாக ஜெயா பிளஸில்? என்று நினைக்கிறேன் ,திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் மேடைப் பேச்சுகளை ஒளிபரப்பி வருகிறார்கள் .நான் பார்த்தது இரண்டு நாட்கள் தான் .ஏற்ற இறக்கத்துடன் எளிமையான வாதங்களுடன் தங்கு தடையில்லாமல் அழகான தமிழில் அவர் பேசுவது கேட்கவே அருமையாக இருக்கிறது .இவரை போன்ற மேடைப் பேச்சாளர்கள் இப்போது விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள் .

இவரின் பேச்சில் நான் அதிகம் ரசித்த பகுதிகள்,

தன் பெயரை சொல்லாமல் வைகோவின் தம்பி சொல்கிறேன் என்று இவர் தன்னை விளித்துக் கொள்ளும் பாங்கு வித்தியாசமாக இருக்கிறது .

2ஜி ஊழல் பற்றி பேசும் போது ,"ஒரு லட்சம் எழுபத்தி ஆறாயிரம் கோடினா எனக்கு எழுதவே தெரியல .ஒரு சார்டர்ட் அக்கவுண்டன்ட் கிட்ட கேட்டேன் ,எண்பத்து அஞ்சாயிரம் கொடி பேருக்கு இந்த பணத்தை பிரிச்சு கொடுத்தா தலைக்கு எவ்வளவு வரும் ?ஆளுக்கு பத்தாயிரம் வரும்.
ஒரு பையர் இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டேன் ,இத கொளுத்தணும் ன்னா எத்தனை நாளாகும்ன்னு ,இருபத்து ரெண்டு நாளாகும் .ஒரு பஸ் கம்பனி முதலாளி கிட்ட கேட்டேன் ,இந்த பணத்தை எல்லாம் எடுத்துகிட்டு வரணும் ன்னா எத்தனை வண்டி தேவைப்படும்ன்னு ,இருநூத்தி அம்பது வண்டி தேவைப்படும் .அத்தனையையும் ஒருத்தனே எடுத்துகிட்டு வந்துட்டான் .அதனால தான் அவன் பேரு ராஜாவாம் ."

தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கொலைகளையும் அது தொடர்பான பெரியவீட்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு ....இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது வரை ...."இவர் இதயம் இனிக்கனும் கண்கள் பனிக்கனும்ன்னா மூணு பேராவது சாகனும் ."

அவரின் விதவை தங்கை ;தங்கையின் பொருளாதார சூழல் என்று பேசிவிட்டு ,"நான் சொன்னேன் ,ஏனம்மா ,ரேஷன் அரிசி வாங்கி சமைக்க வேண்டியது தானே என்று ,அவள் சொன்னாள் அது சமைக்க முடியாது அண்ணா ,அதை சமைக்க வேண்டுமானால் அரை சிலிண்டர் கேஸ் காலியாகிவிடும் ."

எல்லாவற்றிற்கும் மேலாக ,"கலைஞர் சொல்கிறார், நான் அவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேனாம் .எதற்காக நான் பொறாமைப்படவேண்டும் ?அவருக்கு என்ன ஆறடி கூந்தலா இருக்கிறது நான் பொறாமைப்பட ?"

ஆனால் ராஜாவையும் கனிமொழியையும் இணைத்து பேசும் சில சிலேடை பேச்சுகளை இவர் தவிர்க்க வேண்டும் .நேரம் கிடைத்தால் கேட்டு மகிழுங்கள் .


11 comments:

தமிழ் உதயம் said...

அற்புதமான மனிதர், அற்புதமான பேச்சாற்றல், அற்புதமான இயக்கம், அற்புதமான தலைவரை பெற்றவர். கட்சி வளராமல் இருப்பது தான் வருத்தமாய் உள்ளது.

Unknown said...

//அவருக்கு என்ன ஆறடி கூந்தலா இருக்கிறது நான் பொறாமைப்பட ?"//

//.."இவர் இதயம் இனிக்கனும் கண்கள் பனிக்கனும்ன்னா மூணு பேராவது சாகனும் //

நல்லாவே சொல்லியிருக்காரு...

பூங்குழலி said...

அற்புதமான மனிதர், அற்புதமான பேச்சாற்றல், அற்புதமான இயக்கம், அற்புதமான தலைவரை பெற்றவர். கட்சி வளராமல் இருப்பது தான் வருத்தமாய் உள்ளது///


நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் .என் மகனை அழைத்து பார்க்க சொன்னேன் அவர் பேசும் ஸ்டைலை பார்ப்பதற்காக .....ஆனால் எங்கோ கொஞ்சம் நீர்த்துத்தான் போய்விட்டார்கள் .சரிவை சரி செய்ய ஏதும் முயற்சிகள் எடுப்பதாக தெரியவில்லை .

பூங்குழலி said...

நல்லாவே சொல்லியிருக்காரு... //////

ஆமாம் ,எழுத்தில் படிப்பதைக் காட்டிலும் கேட்க மிக நன்றாக இருந்தது

மதுரை சரவணன் said...

naan mathurai mediyil pona maatham ivar petchai ketten... arumai. thanks for sharing. vaalththukkal

பூங்குழலி said...

ஆமாம் ரொம்பவும் அருமையாக பேசுகிறார் .நன்றி சரவணன்

பூங்குழலி said...

நாஞ்சில் சம்பத் அவர்களில் வலைத்தளம் இது ....www.nanjilsampath.com

Anonymous said...

இவர் இதயம் இனிக்கனும் கண்கள் பனிக்கனும்ன்னா மூணு பேராவது சாகனும் //
-;))

நிரூபன் said...

நான் நாஞ்சில் சம்பத் பற்றி அறியவில்லை. ஆனாலும் உங்களின் தகவல் மூலம் அவரின் தமிழ்த் திறனை அறிந்து கொண்டேன்! நகைச்சுவையாகவும், நறுக்காகவும், நாசுக்காகவும் பேசும் அவரது பேச்சின் ஒரு சில பகுதிகளை பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள்!

பூங்குழலி said...

இவர் இதயம் இனிக்கனும் கண்கள் பனிக்கனும்ன்னா மூணு பேராவது சாகனும் //
-;))

ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது இது ...அதுவும் அவர் அங்க இங்க சுத்தி இப்படி முடிச்சது கலைஞர் ஸ்டைல் சாயல் .....விஷயமும் உண்மைங்கறது கூடுதல் வெயிட் ...நன்றி சதீஷ்குமார்

பூங்குழலி said...

நான் நாஞ்சில் சம்பத் பற்றி அறியவில்லை//

அவரின் தமிழுக்காகவும் பேச்சாற்றலுக்காகவும் அவர் அறியப்படவேண்டியவர் .நன்றி நிரூபன்