உரத்த குரலில்
என்னை அழைக்கிறது மழை
சின்ன தூறலாய்
சிணுங்கிப் பார்த்து
பெரும் துளியாய்செல்ல சண்டை செய்து
பெரிய மழையாய்
இப்போது கோபம் காட்டுகிறது .
எது செய்வதென்று தெரியாமல்
தவிக்கிறேன் நான் ...
கதவடைத்து காது பொத்தி
காணாதது போலிருக்கிறேன்
ஜன்னலில் ஆங்காரமாய்
அடிக்கிறது மழை .
தேநீர் கோப்பையுடன்
கவனியாதது போலிருக்கிறேன்
படி தாண்டி வருவேனென
அழிச்சாட்டியம் செய்கிறது.
உரத்த குரலில் அழைத்தபடியே
இன்னமும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை .
இனி தவிர்க்க முடியாதென
கதவை திறந்து
தெருவில் வந்து
தயக்கமாய் கால் நனைக்கிறேன்
ஜில்லென பாய்ந்து
என்னை ஆலிங்கனம் செய்து
உச்சி முகர்ந்தது மழை ....
படத்திற்கு நன்றி :http://www.ghulmil.com/
4 comments:
கவி மழை இதமாக...
நன்றி குணசீலன்
நானும் நனைந்தேன் மழையில்
தங்களுடன் கை கோர்த்து !
மழை பலரையும் மகிழ்விக்கிறது போலும் ..நன்றி ஸ்ரவாணி
Post a Comment