Tuesday 25 October 2011

மழை








உரத்த குரலில்
என்னை அழைக்கிறது மழை
சின்ன தூறலாய்
சிணுங்கிப் பார்த்து  
பெரும் துளியாய்
செல்ல சண்டை செய்து
பெரிய மழையாய்
இப்போது
கோபம் காட்டுகிறது .

எது செய்வதென்று தெரியாமல்
தவிக்கிறேன் நான் ...
கதவடைத்து காது பொத்தி
காணாதது போலிருக்கிறேன்
ஜன்னலில் ஆங்காரமாய்
அடிக்கிறது மழை .
தேநீர் கோப்பையுடன்
கவனியாதது போலிருக்கிறேன்
படி தாண்டி வருவேனென
அழிச்சாட்டியம் செய்கிறது.

உரத்த குரலில் அழைத்தபடியே
இன்னமும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை .
இனி தவிர்க்க முடியாதென
கதவை திறந்து
தெருவில் வந்து
தயக்கமாய் கால் நனைக்கிறேன்
ஜில்லென பாய்ந்து
என்னை ஆலிங்கனம் செய்து
உச்சி முகர்ந்தது  மழை ....




படத்திற்கு நன்றி :http://www.ghulmil.com/latest-animated-fantasy-wallpapers/animated-3d-girl-in-rain-wallpaper/


4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கவி மழை இதமாக...

பூங்குழலி said...

நன்றி குணசீலன்

Anonymous said...

நானும் நனைந்தேன் மழையில்
தங்களுடன் கை கோர்த்து !

பூங்குழலி said...

மழை பலரையும் மகிழ்விக்கிறது போலும் ..நன்றி ஸ்ரவாணி