என் வாய் சிரிப்பில்
விரிந்திருப்பதால்
என் தொண்டை பாடலில்
ஆழ்ந்திருப்பதால்
இத்தனை காலமும்
வலி பற்றிக்கிடந்த பின்
நான் வருந்தவில்லை
என நீ எண்ணிவிட்டாயா ...
என் வாய் சிரிப்பில்
விரிந்திருப்பதால்
என் உள்ளத்தின் குரல்
உனக்கு கேட்கவில்லையா ?
என் கால்கள் ஆட்டத்தில்
மகிழ்ந்திருப்பதால்
நான் இறந்து கொண்டிருப்பது
உனக்கு தெரியவில்லையா ?
Minstrel Man By Langston Hughes
Because my mouth
Is wide with laughter
And my throat
Is deep with song,
You do not think
I suffer after
I have held my pain
So long?
Because my mouth
Is wide with laughter,
You do not hear
My inner cry?
Because my feet
Are gay with dancing,
You do not know
I die?
Is wide with laughter
And my throat
Is deep with song,
You do not think
I suffer after
I have held my pain
So long?
Because my mouth
Is wide with laughter,
You do not hear
My inner cry?
Because my feet
Are gay with dancing,
You do not know
I die?
9 comments:
மிக அருமை பூங்குழலி! மூலத்தின் சுவை குன்றாமல் நன்கு மொழிபெயர்த்து உள்ளீர்கள். மிக ரசித்தேன்...
கணேஷ் அவர்கள் சொன்னபடி தரமான மொழி பெயர்ப்பு. இந்த கவிதை எனக்கு "வெளியே சிரிக்கின்றேன் உள்ளே அழுகின்றேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குகிறேன்" என்ற பாடலை எனக்கு நினைவு படுத்துகிறது:
அழகான கவிதை ..
அன்புடன்
ராஜா
நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.
உற்சாகமூட்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கணேஷ்
நீங்கள் சொல்வது மிக சரி அவர்கள் உண்மைகள்
..வெளியே சிரித்து பிறரை மகிழ்விப்பவர்கள் தங்கள் வேதனையை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் ...சரியான உதாரணம் சொன்னீர்கள் ...மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு
மிக்க நன்றி ராஜா
மலையில்
மெல்லப் பனி தழுவ...
குளிருக்கு கம்பளியும்,
அனலுக்கு தணலும் இருக்க,
அத்தணலில் முதிரான சோளக்கதிரை
திருப்பிப்திருப்பி இதமாக வாட்டி
மேலே உறுகாய் தொக்கை தடவி,
சுடச்சுட ஒரு வாய் கடிக்கும் போது
சுறுசுறுவென சுகமாக இருக்குமே,
அந்தச் சுகத்தை
இந்த மொழி பெயர்ப்பில் காண
முடிகிறது..
வாழ்த்துகள் !
எத்தனை ரசமான சுவையான வாழ்த்து .அந்த கவிதையை மொழிபெயர்த்ததன் முழு பயனையும் அடைந்து விட்டாற்போல் மகிழ்ந்து போனேன் உங்களின் பாராட்டில் ...
நன்றி வழக்கறிஞர் அவர்களே ,..
எண்ணங்கள் எழுத்துகள் ஆகின்றன..
அவை எழுச்சி பெற்று மனதில் ஊர்வலம் போக வேண்டும்.
அப்போதுதான் எழுதியவருக்கும் வாசித்தவருக்கும் கொண்டாட்டம்.
தங்கள் நன்றிக்கு என் மகிழ்ச்சி..
Post a Comment