ஒரு அண்டமெங்கும் விரிந்திருக்கிறது
என் வெளி
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம்
என ஐந்தும் சேர்த்து
சில காடுகள் மலைகள் சோலைகள் நீரோடைகள்
எனவும் பரவிக் கிடக்கிறது
என் வெளி
எங்கோ ஒரு பாலைவன மணல் பொட்டலும் சேர்த்து
தெளிந்த நீரோடைகளில்
நீந்திக் கிடக்கிறேன் நான்
காடுகள் தோறும் சுற்றித் திரிகிறேன்
சோலைகளில் மலர் கொய்து
சூட்டிக் களிக்கிறேன்
என் மனம் போல்
சிகரங்களில் ஏறி தொட்டுப் பார்க்கிறேன்
விண்ணைக் கூட
நட்சத்திரங்களை பறித்து
ஓடைகளில் நனைக்கிறேன்
நீரெல்லாம் ஜொலிக்கின்றன
என் மீன்கள்
குயில்கள் கூவிக் கடக்கின்றன என்னை
மான்கள் கொஞ்சிப் போகின்றன
சில எருமைகளும் பாம்புகளும்
உரசிப் போகின்றன
அதனதன் விருப்பம் போல்
கீறும் சிறு முட்களும்
நாறும் சில குப்பைகளும்
குறுக்க முடியாததாக இருக்கிறது என் வெளி
மலர்கள் சொரிந்து கிடக்கின்றன
என் பாதையெங்கும்
மகரந்த வாசம் ஏந்தி
எவரும் தீண்ட முடியாததாக
இருக்கிறது என் வெளி
எனதே எனதாக -
எவர்க்கும் வசப்படாமல்
உலவித் திரிகிறேன்-
நானோர்
வனதேவதையென
10 comments:
அருமையான வரிகள்...
முடிவில் சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
நன்றி நண்பரே
ada daa arumai!
வனதேவதை சொன்ன கவிதை அருமை
மிக அழகான வார்த்தைக் கோவைகளால் மயக்குகிறது உங்கள் தமிழ். வனதேவதைக்கு என் நல்வாழ்த்துக்கள். அருமை.
நன்றி சீனி
மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்
மிக்க நன்றி கணேஷ் ...மனம் உவந்து போனேன் உங்கள் பாராட்டை கேட்டு
அழகு
மிக்க நன்றி நிலவன்பன்
Post a Comment