Tuesday 7 August 2012

மழை







வெகு நாட்களாக மறந்து போயிருந்தேன் 
மழையை நான் 

எங்கோ தூர தேசம் போயிருக்க வேண்டும் 
என்று எண்ணியிருந்தேன் ..

எவர் ஊர்களிலோ தன்னை  மறந்து 
அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் ..

வெறும்வானம் பரிகசித்த சில நாளில் 
கோபித்தே  இன்னமும்  மறந்து போனேன்  

நான் 
எனை  வெறுத்த ஒரு நாளில் 
செல்லமாய் 
என் தலை தட்டி 
கண் மூடி 
கன்னம் தொட்டு 
நான் 
என்றது  மழை  ..........










16 comments:

MARI The Great said...

நன்றாக இருக்கிறது சகோ! அருமையான கவிதை சகோ!

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மனத்தை குளிர்வித்துப் போகுது
தங்கள் கவிதை மழை
தொடர வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

வெகுநான் காணாமல் போயிருந்த நட்பு திரும்பக் கிடைத்த மகிழ்வை எனக்குள் தோற்றுவிக்கும் மழை பொழியும் ஒவ்வொரு தினமும். உங்களின் மழைக் கவிதைகள் வெளியாகும் தினமும் அப்படியே பூங்குழலி. இதற்காகவேனும் உங்களின் ஓயாத பணிகளுக்கிடையில் நிறைய நேரம் கிடைக்கட்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி இக் கவிதையை ரசித்ததில் எனக்கு-

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

படித்தவுடன் மனது சில்லென்று உள்ளது... (இங்கே இன்னும் வெயில் கொளுத்துகிறது)

நன்றி… தொடர வாழ்த்துக்கள் சகோதரி...

நிரஞ்சனா said...

மழையைப் பாடிய கவிதை சூப்பர்.

கீதமஞ்சரி said...

மழையின் வருடலைப் போலவே கவிதை வருடல் மனதுக்கு இதம். பாராட்டுகள் பூங்குழலி.

பூங்குழலி said...

மிக்க நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே

பூங்குழலி said...

என் மனதை குளிர்வித்தது உங்கள் பாராட்டு ..நன்றி ரமணி அய்யா

பூங்குழலி said...

உங்கள் பாராட்டு மழையில் வழமை போலவே நனைத்து போனேன் பால கணேஷ் ..நிறைய நேரமும் நிறைய மழையும் வேண்டுவோம்

பூங்குழலி said...

நன்றி தனபாலன் ..மழை என்றாலே சில் தானே

பூங்குழலி said...

மிக்க நன்றி நிரஞ்சனா

பூங்குழலி said...

கீதமஞ்சரி ..வசீகரிக்கும் பெயர் உங்களது ..பாராட்டுக்கு நன்றி

Anonymous said...

’மழை’ பேரை கேட்டாலே சும்மா மனசுல குளிரெடுக்குதுல்ல!!!
கவிதை நன்று.

Kavinaya said...

மழைக் கவிதை குளுகுளுன்னு இருந்தது :)

பூங்குழலி said...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலையே ?நன்றி மழை ?மிக்க நன்றி

பூங்குழலி said...

கவிநயா நீங்க வந்ததே குளுகுளு தான் ....மிக்க நன்றி... நலம்தானே ?