காவல்துறை மக்களிடத்து தன் நம்பிக்கையை இழந்து பல காலமாகிவிட்டது .முற்றிலும் பெண்காவலர்களால் ஆன
காவல் நிலையங்கள் நிறுவப்பட்ட போது அவை பெரும் புரட்சியாக சித்தரிக்கப்பட்டன .அதுமட்டுமல்லாமல் பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியமானதொரு மைல்கல்லாகவும் ...
நான் அறிந்த சில பெண் +காவலர்கள் சார்ந்த அனுபவங்களில் சில இவை ..
1.இவரே பெண் காவலர் .தெருவில் நடந்து கொண்டிருந்த போது இவரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு போனது .மூன்று வருடங்கள் ஆகியும் நகையையும் மீட்க முடியவில்லை ,திருடனையும் பிடிக்க முடியவில்லை .அந்நேரம் கூட அந்த திருடனை விரட்டி சென்று இவர் பிடிக்க முயலவே இல்லை .அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாராம் ?!
2. இவரும் பெண் காவலரே .உடல் நலக் குறைவுக்கென இவர் ஒய்வெடுக்க வேண்டிருக்க
தக்க சான்றிதழ்கள் (எல்லாமே உண்மையானவை )முறையாக கொடுத்த பின்னும் "லீவ் அப்ரூவல் " ஆக தன் மேலதிகாரிகளுக்கு இவர் கொடுத்தது சில ஆயிரங்கள் ?!
3.தெரிந்த பெண்ணொருத்தி .குழந்தையில்லை என விவாகரத்து ஏதும் செய்யாமல் திருட்டுத்தனமாக இன்னொரு திருமணம் செய்து கொண்டான் கணவன் .இவளின் நகைகளையும் அடமானத்தில் வைத்து விட்டு .அதை மீட்டு தர பெண் காவல் நிலையம் சென்றவளால் சில முறைக்கு மேல் செல்ல முடியவில்லை .ஏன் என்று கேட்ட போது ,"போங்க மேடம் ,அங்க போயி நிக்குறதுக்கு என் வீட்டுகாரரரு கிட்டயே கேட்டு வாங்கிறலாம் போலிருக்கு .எப்ப போனாலும் காசு கேக்குராங்க .இல்லன்னா சாப்பாடு ஜூஸ் ன்னு ஏதாவது வாங்கிட்டு வர சொல்றாங்க .சாப்பாடு நேரம்ன்னா பிரியாணி வாங்கித் தரனும் .செலவளிக்க முடியல ."
4.கணவனை இழந்த பெண் .கணவன் நோயுடன் கடனையும் வைத்துவிட்டு போக ஒரே மகளுக்கு மாமியார் சொத்தில் ஏதேனும் வாங்க போராடிக் கொண்டிருக்கிறாள் .காவல் நிலையம் ,மாமியார் வீடு என்று மாறி மாறி அலைந்தவள் சில நாளில் ஓய்ந்து போனாள் ."போ மேடம் ...ஒரொரு தடவையும் மாமியார் கிட்ட பேச காசு கேக்குறாங்க ..அந்த பக்கம் மாமியார் கிட்ட காசு வாங்குறாங்க .அந்தம்மா துட்டு வச்சிருக்கு .எங்கிட்ட என்ன இருக்கு ?ஒரேடியா என் மாமியார் இது என் மகனுக்கே பொறந்ததில்லன்னு சொல்லிருச்சி .போலீசுல அம்பதாயிரம் கேக்குறாங்க .சொத்தே அவ்வளவு தான் பெறும் . போகட்டும் விட்டுட்டேன் .விடு மேடம் ."
நீதி தேவதை புறக்கண் மட்டுமல்ல அகக்கண்ணும் அறிவும் கட்டப்பட்டே இருக்கிறாள் ஊமையாக ...

20 comments:
கொடுமைதான்...இந்த பெண் காவலர்களால்/காவல் நிலையத்தால் பெண்களுக்கு உண்மையாக எந்த பயனும் இல்லை. பிரச்சினை என்று போனால், அதை நாட்டாமைத்தனமாக தீர்க்கத்தான் முயல்கிறார்களே தவிர நீதியோ/உண்மையோ கொஞ்சமும் இல்லை. ஒரு பெண் சண்டையின் போது கணவன் அடித்ததும் திரும்ப அடித்துவிட்டாள். அதை கணவன், சொன்னபோதும் "என்ன இருந்தாலும் ஆம்பளைய கைய நீட்டி அடிக்கலாமா" என்றுதான் அந்த போலீஸ் கேட்டார். ஏன் அவளது கணவன் அடித்தான் என்றோ, கணவன் மட்டும் அடிக்கலாமா என்றோ அவர் கேட்கக்கூட இல்லை.
வேதனையான விஷயம்!
காவல் மகளிர் எங்கே முறுக்கைக் காட்டவேண்டுமோ அங்கே முடங்கித் தடுமாறுகிறார்கள். எங்கே இளக்கம் காட்டவேண்டுமோ அங்கே இறுக்கம் காட்டி மிரட்டுகிறார்கள். மிகவும் வேதனை தரும் பதிவு.
அறியாத விசயங்கள்...
வேதனையளிக்கிறது...
மிகவும் சரியாக சொன்னீர்கள் முல்லை .இவர்களால் எந்த பயனும் இல்லை .ஆண் காவலர்கள் எவ்வாறெல்லாம் வரம்பு மீறுகிறார்களோ அவ்வாறே இவர்களும் ..பணம் ,பிரியாணி என்று ..
நிஜத்திலேயே வெட்கமும் வேதனையும் பட வேண்டிய விஷயம் -வரலாற்று உண்மைகள்
ஆமாம் கீதமஞ்சரி ..இவர்களால் பெண்களுக்கு மட்டுமல்ல பெண் காவலர்களுக்கு கூட பாதுகாப்பில்லை
இந்த பெண்கள் வந்து சொல்லும் போது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது ..இப்படி நடக்கிறது என்பதை நானும் அறிந்திருக்கவில்லை ,தனபாலன்
நியாம் வேண்ட்மென்றால் நாம் அநியாமாக பணத்தை அள்ளி கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. இவர்களையெல்லாம் காவலர்கள் என்பதை விட கயவர்கள் என்று சொல்லாம்
அநியாயத்திற்கு துணை போக மட்டுமல்ல ,நியாயம் பேசவும் என்று இவர்களுக்கு பணமே பிரதானம்.பணம் இல்லாதவர்கள் எங்கு போவார்கள் என்று தெரியவில்லை .கயவர்கள் என்று சொல்வதே சரி ..
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பெண் காவலர்களாக இருந்தால் என்ன. ஆண் காவலர்களாக இருந்தால் என்ன... வருகிறவர்களை காபி டிபன் வாங்கித்தரச் சொல்லும் (கெட்ட) குணம் மட்டும் மாறாது போலருக்கே... என்ன கொடுமை? விருது பெற்றிருக்கும் உங்களுக்கு சந்தோஷத்தோட என் நல்வாழ்த்துக்கள்,
வாழ்த்துகளுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி
வாழ்த்துகளுக்கு மட்டுமல்ல தகவல் சொல்லியதற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி
முற்றிலும் உண்மை நிரஞ்சனா ..வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
தவறு செய்வதில் ஆண் என்ன ? பெண் என்ன ? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்
இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...
உண்மைதான் ராஜா ..தவறுகள் பதவிகளை பொறுத்தவை போலும்
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
Please refer Sl. No. 45
There is another award for you, Madam.
VGK
பல கோடி நன்றிகள் உங்கள் பாதத்தில் உரித்தாகுக வைகோ அய்யா ...
Post a Comment