தூர தேசமொன்றில்
தொலைந்து போயிருந்தேன் நான்
பெயர் அறியாத தெருக்களில்
உலவித் திரிந்தேன்
யார் இவள் என
கிசுகிசுத்து போனது காற்று
முகம் காண
வந்து போனதொரு மின்னல்
ஆதரவாய் கூந்தல் வருடிப்
போனதொரு மலர்
எவளோ என கடந்து
போயினர் பலரும்
யாரும் இல்லாமல்
முகவரியற்று
நான் போன
அந்நாளில்
தேடி வந்து
என் தோள் பற்றி
நானிருக்கிறேன் என
கரம் சேர்த்து
என்னுடன் நடந்தது
மழை ......
26 comments:
நல்ல வரிகள்...
அந்த மழை எங்கள் ஊருக்கும் வரட்டும்...
arumai!
அருமை.
மழையெனப் பெய்த அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
அருமையான வார்த்தை பிரயோகம்! நல்ல கவிதை!
நல்ல கவிதை! இயற்கைதான் எப்போதும் நம்முடன் துணைவரும்
அருமையான கவிதை
இயற்கையுடன் இப்படி இரண்டறக் கலக்கக் கற்றுக் கொண்டால்
தனிமைத் துயர் ஏது
சங்கடங்க்கள் ஏது
கவிதைக்கு பஞ்சம்தான் ஏது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அற்புதமான வரிகள் மனந்தொட்ட பகிர்வு.
கண்டிப்பாக தனபாலன் ,இதே மழை உங்கள் ஊருக்கும் வரட்டும்
நன்றி சீனி
மிக்க நன்றி குணசீலன்
மழையென மனம் குளிர வைத்தது உங்கள் பாராட்டு ,நன்றி வைகோ அய்யா
வருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகளின் அதிபரே
எங்கும் இயற்கை நம்மை அரவணைக்கும் ,நன்றி அவர்கள் உண்மைகள்
இயற்கையை உணர்ந்துவிட்டால் கவிதைக்கு பஞ்சமில்லை என்பது உண்மைதான் ..மழை செழிப்புடன் கவிதையையும் அள்ளித் தருகிறது .மிக்க நன்றி ரமணி
மிக்க நன்றி சசிகலா வருகைக்கும் பாராட்டுக்கும்
பூவும் குழலும் உங்களுடனேயே இருக்கும் பொழுது மழையும் வேண்டுமா துணைக்கு?
அருமையான கவிதை.
ஹா ஹா ...ஆமாம் பூவும் குழலும் என்னுடனே இருப்பதை மறந்தே போனேன் ...மழை வரும் நாளில் அதன் துணைப்போல சுகமானது வேறொன்றுமில்லையே !மிக்க நன்றி அருணா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்
எக்ஸலண்ட். உடல் குளிர்ந்தது வெளியில் பெய்த மழையில்... மனது நனைந்தது உங்களின் கவிதையால் ரசனை மழையில்!
இன்னமும் மழைப் பக்கம் நீங்கள் ஒதுங்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ..மிக்க நன்றி கணேஷ் உங்கள் பாராட்டுக்கு
பழகிய ஒருவரை பழகாத இடத்தில் பார்த்தால் பரவசம்தானே... உங்களைப் பார்த்ததும் மழைக்கும் அந்த உணர்வு தொற்றிக்கொண்டது போலும். மனம் வருடும் கவி வரிகள். பாராட்டுகள் பூங்குழலி.
ஆம் எங்கே இருந்தாலும் இயற்கை நம் முகம் அறிந்தது தானே ..நன்றி கீதமஞ்சரி
மிக அருமை.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.தேடி வந்து கரம் கோர்த்த மழை நன்று,நல்ல படம்,நல்ல வெளிப்பாடு/
மிக்க நன்றி விமலன் ..மழை போல வந்து வாழ்த்தியதற்கு
Post a Comment