வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார் .வயது 70.எப்பொழுதும் அவருடன் அவர் இளைய மகன் வருவார் .இன்று புதிதாக இன்னொருவரும் வந்திருந்தார் .தம்பி போலும் என நினைத்துக்கொண்டேன் .முதலில் உள்ளே வரவில்லை .Viral load test செய்ய வேண்டும் ,இரண்டாயிரம் ரூபாய் ஆகும் இன்று செய்து கொள்கிறீர்களா அடுத்த முறை செய்து கொள்கிறீர்களா என்று கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தார் .
"என்ன ?" என்று மகனை பார்த்து கேட்கவும் ,"நீங்க யாரு ?"என்றேன் நான் ."அவங்க மகன் தான் " என்றார் ."நா பாத்ததே இல்லையே ?" என்றவுடன் ."நீங்க எங்கம்மாவுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .வேல கீல செய்யாம கெடக்க சொல்லுங்க .நா மாசாமாசம் மாத்திரைக்கு செக் போட்டு கொடுக்குறேன் .அப்புறம் என்ன கேடு ?பதிமூணு மாசத்துக்கு இப்பவே செக் கொடுத்துட்டேன் .இன்னும் என்ன எப்படி தேய்க்கலாம்ன்னு தான் பாக்குறாங்க ."அவர் உடனே ,"நீ செய்யலைன்னு நா சொல்லலையே தம்பி ?வாடகைக்கு கொஞ்சம் பணம் கொடுன்னு தானே சொல்றேன் .""ஒனக்கே எல்லாத்தையும் அழுதுட்டா ,நா ரெண்டு பொண்ணு பெத்துருக்கேன் . அதுங்களுக்கு கார் பங்களா கொடுத்து கட்டி கொடுக்க வேணாமா ?வரவன் ஒசியிலையா கட்டிக்க போறான் ?"
"ஒங்க பொண்ணுக்கு பங்களா கொடுக்கணும்ன்னு சொல்றீங்க ,ஒங்கம்மாவுக்கு வாடகை கொடுக்கறதுக்கு இவ்வளவு பேசுறீங்க ?
"நா நெறைய படிச்சிருக்கேன் ."
"ஒங்கம்மா தானே படிக்க வச்சாங்க ?"
"ஆமா இவங்க தான் வந்து எக்ஸாம் எழுதுனாங்க "
"அவங்க அறிவு தானே உங்களுக்கும் இருக்கும் ?"
"இப்ப கூட வந்திருக்கேன் ,பொழப்ப விட்டுட்டு ...நீங்க என்ன டெஸ்ட் வேணுமோ பண்ணிக்கோங்க "
"ஒங்கம்மாவுக்கு தானே கொடுக்கிறீங்க ?ஏன் கொடுத்தேன் கொடுத்தேன்னு கணக்கு சொல்லிகிட்டே இருக்கீங்க ?இத்தன வருஷத்துல இன்னைக்கு தான வந்திருக்கீங்க ?எப்பவும் ஒங்க தம்பி தான வருவாரு ?
"அந்த பொறுக்கி பயல கட்டிட்டு அழுறாங்க .அவன ஏதாவது செஞ்சு பிழைக்கட்டும்ன்னு மெட்ராசுக்கு அனுப்ப வேண்டியது தானே ?"
"அவர் கிராமத்துல இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ?"
"நா ப்ரொபசரா இருக்கேன் .என் பொண்டாட்டியும் கெட்டிக்காரி அவளும் ப்ரொபசரா இருக்கா .இவங்களுக்கு மகனா பொறந்தது என் தப்பு .லூசு ,பைத்தியம் ....."
சட்டென்று கையெடுத்து கும்பிட்டு அவர் அம்மா சொன்னார் ,"நல்லா சாமிய கும்பிட்டுக்க தம்பி .அடுத்த ஜென்மத்திலயாவது ஒனக்கு புடிச்சாப்புல ஒனக்கு அம்மா கெடைக்கனும்ன்னு ."

11 comments:
//"நல்லா சாமிய கும்பிட்டுக்க தம்பி. அடுத்த ஜென்மத்திலயாவது ஒனக்கு புடிச்சாப்புல ஒனக்கு அம்மா கெடைக்கனும்ன்னு ."//
மிகவும் சோகம்.
அவனைப்பெற்றெடுத்த அந்தத் தாய்க்கு இவன் பேச்சையெல்லாம் கேட்க எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும்?
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html
என்னுடைய இந்தக்கதையில் சுமதி என்ற ஓர் கதாபாத்திரம் பிறப்பு + இறப்பு பற்றி மிக அழகாகச் சொல்லுவாள். முடிந்தால் படித்துப் பாருங்கோ.
ரத்தக்கணணீர் எம்.ஆர்.ராதா நினைவுக்கு வந்து போகிறார்! :(

மனிதர்களுக்குள் பணம் தான் உறவாகிவிடுகிறது போல !
முடித்த விதம் அருமை!
தொடர்கிறேன்.
உண்மைதான் .எதை பற்றியும் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை .போகும் வரையும் அம்மாவையும் தம்பியையும் திட்டிக்கொண்டே தான் போனார் வைகோ
உண்மைதான் இளங்கோவன் அம்மாவை அம்மா என்று சொல்லி கொள்வதில் அவமானம்
ஆமாம் ரிஷபன் பணமும் பகட்டும் தான்
நன்றி ஊமைக்கனவுகள்
Post a Comment