Thursday, 14 May 2015

உத்தமவில்லன்

நானும் என் பள்ளி தோழியும்   ரெண்டு நாளைக்கு முன்னால முடிவெடுத்து ஆன்லைன்ல டிக்கெட் எடுத்து இன்று உத்தமவில்லன் பாக்க போனோம்.போனோமா ..தியேட்டருல போனவுடனே ஆளுக்கொரு பாப்கார்ன் கோக் சகிதம் ரெடியாகிட்டோம் .அவ நேத்திலிருந்து ஒரே பொலம்பல் .எங்க வீட்ல ஒங்க ரெண்டு  பேருக்கும் வேற  படமே கெடைக்கலையான்னு திட்டுறாங்கன்னு .நல்லாவே இல்லையாமேன்னு ?நான் சொன்னேன் ,சரி விடு நாமளும் படத்த பாத்துட்டு நல்லா இல்லைன்னு சொல்லுவோம்ன்னு .

படம் பாத்தாச்சு .கமல் ரொம்பவே  மெனெக்கெட்டிருக்கார் ,எப்பவும் போலவே .ஆனா அது புல்லா  நமக்கு தெரியணும்ன்னு நெனச்சோ என்னவோ படம் நீளம் ,அதோட satire  நமக்கு புரியாதுன்னு நெனச்சாரோ என்னவோ ரொம்ப வெளக்கமா ...ரொம்...ப மெதுவா ...ஆனா அவர் பெரிய கோட்டைவிட்டது நாயகிகள் தேர்வுல .ஆன்ட்ரியா  அவ்வளவு முக்கிய ரோலுக்கு சுமார் effort ...சம்பந்தமில்லா காஸ்ட்யூம்ஸ் ...

படம் முழுக்க கமலோட  சொந்த வாழ்க்கை போலதான் இருக்கு ,எல்லாரும் சொன்ன மாதிரியே .அதிலும் நிறைய சுய பச்சாதாபம் தெரியுது ?கமல் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுறார் .எனக்கு ஏத்துக்கவே முடியல .அப்புறம் அந்த கடைசி சீன்ல ஒரு கூட்டமே ஹாஸ்பிடல் லாபியில படம் பாக்குறது ?சலங்கை ஒலி  சாயல் ?வேற வழியில்லையோ என்னவோ ?

அந்த உத்தமன் கதை ஒரு  பெரிய நடிகரோட swansong ன்னு சொல்றது  "ரிக்க்ஷாக்காரன் "எம்ஜிஆரோட பெஸ்ட் படம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ..காமெடிய வேற ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்காங்க.இந்த கதைய இயக்குறதா நடிக்க கேபி ஏன் ஒத்துக்கிட்டார்ன்னு தெரியல... அந்த உத்தமன் குழுவே ஒரு பெருசுங்க க்ரூப்பா இருக்கு -சோவோட விவேகா பைன் ஆர்ட்ஸ் குழு மாதிரி ...

ஆனா படம் முழுக்க நிறைய  memorable moments ...

அந்த கடிதங்கள்
கமலுக்கு ட்யூமர்ன்னு தெரியும் போது கேபியோட ரியாக்சன்.
ஊர்வசி + எம் எஸ் பாஸ்கர்
பல வசனங்கள்
பல பாடல் வரிகள்
உத்தமன் intro ..

யாரும் கேக்கலைனாலும் என்னோட suggestions ...

அந்த  உத்தமன் கதையில கண்ண மூடிட்டு கத்திரிக்கோல வச்சிருக்கலாம் .
கமல் ஒரு படத்துக்கு ஒரு பாட்டு பாடுனா போதும் .
சில வசனம் ரேடியோ நாடகத்துக்கு எழுதின மாதிரி இருக்கு .
ஆன்ட்ரியா ரோலுக்கு ஸ்ரீதேவிய கேட்டிருக்கலாம் .
உத்தமன் படத்துக்காவது இளையராஜாவை  இசைய வைத்திருக்கலாம் .

என் தோழி சொன்னா ..எல்லாரும் சொன்ன  அளவுக்கு மோசமில்ல . ஆனா படம் முழுக்க சொந்த கதையாவே இருக்கே ,கமலுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையா ?




8 comments:

sury siva said...

//கமலுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையா ?//

s sonnalum thappu.
no sonnaalum thappu.

ethu rightu ?
athu kamalu sarukke theriyumO ennavO illai nammai innum rasikar appadinnu solravanga nalla purinchukkalla appadinnu innoru padam eduppaaro ennavO ?


irunthaalum
kamalukku je.

subbu thatha.

வருண் said...

நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க ஒரு சுமாரான ரஜினி ரசிகை.:) கமல் படத்தை உங்களால் இதுக்கு மேலே புகழ முடியாது.

கமல் என்றாலே தன் வாழ்க்கையை நியாயப்படுத்தல் வகையறா என்பேன். ஏன் இப்படி நியாயப் படுத்திக்கிட்டே இருக்காருனு தெரியலை.

"நான் இப்படித்தான்" என்றால் பரவாயில்லை. அதுக்கு மேலே "நான் செய்றது ஒண்ணும் தப்பில்லை, இப்படி வாழ்வதில் தப்பில்லை. நீங்க எல்லாம் ஏமாத்துறீங்க"னு சொல்ல முயல்வதுபோல் தோனுது. அது இவருக்குத் தேவையில்லைனு யாரும் அவருக்கு எடுத்துச் சொல்வதில்லை போலும். அவர் ரசிகர்கள் எல்லாம் அவரை திருந்த விடுவதில்லை என்பது இன்னொரு சோகம்.

அவருக்கு உடம்புக்கு சரியில்லையா என்னனு தெரியலை. சாவைப்பத்தியும், நமகப்புறம் நம்மை எப்படி உலகம் பேசும்? னு யோசிக்க ஆரம்பிச்சு இருக்கார் போல.

கொஞ்சம் ஸ்ப்ரிச்சுவல் தாட்ஸ் வர்ர மாதிரி இருக்கு.

என் பின்னூட்டம் வள வளனு போகுது. இதோட நிறுத்திக்கிறேன். :)

பூங்குழலி said...

நான் சுமாரான ரஜினி ரசிகை இல்லை தீவிரமான ரசிகை -அதுக்காக அவர் லிங்கா படத்தை பார்த்துடல .கமலோட வாழ்க்கை முறையில ஒரு நேர்மை இருக்கு .அப்புறம் அவர் படங்களுக்கான அவருடைய மெனக்கெடல் நிஜம்தானே ? ஆனாலும் படம் கமல் ஸ்டாண்டர்டுக்கு இல்லை .கண்டிப்பா .. இதுக்கு மேல புகழனும்ன்னு தோணியிருந்தா கண்டிப்பா செஞ்சிருப்பேன் .No prejudice

வருண் said...

கோபித்துக்கொள்ளாதீங்க, நான் சொன்னதுதாங்க சரி. :) நீங்க ஒரு சுமாரான ரஜினி ரசிகைதான். ஒரு தீவிர ரஜினி ரசிகை என்றால் எப்படி லிங்கா படம் பார்க்காமல் இருப்பீங்கனு புரியவில்லை எனக்கு. ஊரில் உள்வங்க ஆயிரம் சொன்னாலும் ரசிகர்கள் நிச்சயம் தியேட்டர்ல போயி பார்த்துடுவாங்க. அதுவும் உத்தம் வில்லைனை எல்லாம் பார்த்து இருக்கீங்க. லிங்காவுக்கு அப்படி என்ன கொறைச்சல்? சரி விடுங்க..இது உங்க் பர்சனல் விசயம்.. ஒரு காலத்தில் ரஜினி ரசிகையா இருந்திருப்பீங்க போலனு நினைச்சுக்கிறேன்.

No prejudice?? :)

We all try not to have any prejudice and want to be fair when watching a movie or writing a review about it, but we don't succeed in such an attempt completely. Because we are all human beings.. :)

Yarlpavanan said...

பார்த்துப் புரிந்த அலசல்
பக்குவமாகச் சொல்லி இருக்கிறியள்!

பூங்குழலி said...

நன்றிங்க

ezhil said...

மிகப் பெரிய மெனக்கெடல் என்று கேள்விப்பட்டதால் என்று போய்ப் பார்க்கலாமா என்றிருந்தேன் ஆனால் விமர்சனங்கள் வேண்டாமென்கின்றதே.... நன்றி.

பூங்குழலி said...

இல்லை அவசியம் படத்தை பாருங்கள் எழில் .ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம்