எந்த பாதையிலும்
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு வீட்டையேனும்
கதவுகள் கழற்றப்பட்டு
செங்கல்கள் உதிர்க்கப்பட்டு
நிர்வாணமாய் நிற்கிறது
அந்த வீடும்
அவ்வீட்டில் குடியிருந்த
நினைவுகளையும்
சிரிப்புகளையும்
துக்கங்களையும்
எவரும் அறியாமல்
எங்கோ தொலைதூரத்தில்
கொண்டு கரைக்கிறது காற்று
மிஞ்சியிருக்கும்
செங்கலும் மண்ணும்
பழங்கதைகள் பேசிக்கழிக்கின்றன
எஞ்சியிருக்கும் பொழுதுகளை
எல்லாம் களையப்பட்டு
அடித்தளம் அகற்றும் போது
ஓவென்று அழுகிறது மண்
தான் அனாதையென
5 comments:
கவிதை மிக அருமை!
பூங்குழலி அவர்களே
உங்கள் எழுத்துக்களை தரிசித்து
வெகுநாளாயிற்றே!
கவிதை முள் தைக்கிறது.
ரோஜாக்களிலேயே
நாம் பன்றிகளாய்
புரண்டு கொண்டிருந்த போதும்
பாதாளத்து "முனிசிபாலிடி" பாதகன்
கடப்பாறையும் கையுமாய்
இமயத்துக்கபாலங்களையும்
அல்லவா
நொறுக்கி விட்டுப் போயிருக்கிறான்.
மனிதனுக்கு சீற்றம் வரவேண்டும்
அவன் மூளைக்குள்
முளையடிக்கப்பட்ட
"ப்ராபலிடி தியரிக்கு"ம் கூட
அணு பிளப்பு அறிவின்
கணித மயிர்கள்
சிலிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆவேசம் வரட்டும்.
அடுத்து வரும் நம்
கை பேசிக்குள்
அவன் செருகியிருக்கும்
கிளி ஜோஸ்ய அட்டை
கட்டாயம் இருக்கும்.
பூமித்தாயின் இந்த
புல்லரிப்பும் புளகாங்கிதமும் நமக்கு
புரிந்து போகும்!
அன்புடன் ருத்ரா.
(இது தான் தமிழ் மணத்தில்
என் ஜன்னல்:__
"சிந்து"கின்றோம் ஆனந்தக்கண்ணீர் ruthraavinkavithaikal.blogspot.com
எத்தனை முறை சொன்னாலும் போதிய அளவில் நன்றி உரைத்தது போல இல்லை ....மீண்டும் மீண்டும் பல முறை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் ....
அருமையான பா வரிகள்
தொடருங்கள்
தொடருவோம்
மிக்க நன்றி.
Post a Comment