Sunday, 29 January 2017

காவல் ? துறை

இது சமீபத்திய மெரினா சம்பந்தப்பட்ட  பதிவல்ல .என் பேஷண்ட் ஒருவரின் சொந்த அனுபவம் பற்றியது .ஒரு விதவை பெண் .ஒரு மகன் மகள் .கணவர் இறந்து இருபது  பிளஸ் வருடங்கள் .மகனுக்கு  இப்போது வயது இருபது .
போனவாரம் என்னை பார்க்க வந்திருந்தார் .

"என் பையன் தூக்கு மாட்டிகிட்டு செத்து போய்ட்டான் ,மேடம் .அவங்கப்பா இல்லாம எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்திருப்பேன் .மூணு வருஷத்துக்கு முன்னால ட்ரிபிள்ஸ் போனான்னு புள்ள மேல போலீசுல கேஸ் எழுதிட்டாங்க .அப்புறம் ஸ்டேஷன்ல கூப்பிட்டு ரெண்டு மூணு கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க .

அப்புறம் சும்மா சும்மா வீட்டுக்கு வருவாங்க .காசு கேப்பாங்க .வருஷத்துக்கு அம்பதாயிரம் வரைக்கும் செலவு பண்ணியிருக்கேன் .வீடு மாத்தி மாத்தி போவேன் .எப்படியோ யாரோ சொல்லிக்கொடுத்து சரியா வந்துருவாங்க .இப்ப ரெண்டு மூணு மாசமா புள்ள, கூப்பிட்டும் போகல .நா தான் தப்பு எதுவும் பண்ணலையே நா ஏன் போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான் .இப்ப இந்த வீட்டுக்கு வந்து ஒரு  மாசம் ஆகிருச்சு .

நேத்து வேலைக்கு போயிட்டு வந்தா ,ஹவுஸ் ஓனர் வந்து யாரோ ஒருத்தர் உங்க மகன தேடி வந்தாரு .கலர் ட்ரெஸ்ல இருந்தாரு .ஆனா போலீஸ் மாதிரி இருந்ததுனு சொன்னாங்க .படபடன்னு போய் பாத்தா கதவு பூட்டியிருந்தது .தட்டி தட்டி தெறக்கல. அப்புறம் என் தம்பிய கூப்பிட்டு கதவை ஒடச்சு பாத்தா எல்லாம் உடைஞ்சு போச்சு .

எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்தேன். தைரியம் சொல்லி சொல்லி வச்சிருந்தேன் . எப்படியெல்லாம் காப்பாத்தியும் எம்புள்ளைய வாழ விடாம பண்ணிட்டாங்களே ..."

Wednesday, 4 January 2017

இனம்

சிலர் அடுத்தவரிடம்  கடிக்கிறார்கள்
ஒரு கா
லையோ 
கையையோ 
எதையோ
 
பல்லில்  கவ்வி
ஆன வேகத்தில் வெளியே ஓடி
மண்ணில் மூடுகிறார்கள்
  
மற்றவர்களோ  பரப்பி வைக்கிறார்கள்
முகர்ந்து பார்த்து முகர்ந்து பார்த்து 
மொத்த மண்ணையும் தோண்டி வைக்கிறார்கள்

அதிர்ஷ்டம் இருந்து
ஒரு கையோ ஒரு காலோ
எதுவோ கிடைத்தால்
அவர்கள் முறை கடிக்க
 

கலகப்பாக ஆட்டம் தொடர்கிறது

கைகள் இருக்கும் வரை
கால்கள் இருக்கும் வரை
ஏதோ ஒன்று இருக்கும் வரை


Race - Poem by Vasko Popa


Some bite from the others
A leg an arm or whatever

Take it between their teeth
Run out as fast as they can
Cover it up with earth

The others scatter everywhere
Sniff look sniff look
Dig up the whole earth

If they are lucky and find an arm
Or leg or whatever
It's their turn to bite

The game continues at a lively pace

As long as there are arms
As long as there are legs
As long as there is anything

Monday, 2 January 2017

சின்னம்மாவுக்கு சில அவசர ஆலோசனைகள் ...

பெரியம்மா (நன்றி திரு.பொன்னையன் )இறந்து ஒரு மாசம் கிட்ட ஆகப்போகுது .நாம எல்லாரும் எதிர்ப்பார்த்தப்படியே சின்னம்மா கனத்த மனசோட ? அதிமுகவில பொறுப்புக்கு வந்துருக்காங்க .இந்த நேரத்துல ,என்ன தான் யாரும் கிண்டல் பண்ணினாலும் அவங்களுக்குனு  ஒரு ஸ்டைல் of  dressing  தேவை .

இப்ப மம்தான்னா அந்த பெங்காலி புடவை ,ஹவாய் செருப்பு ,சோனியானா அந்த ஒரிசா காட்டன் புடவை ,மாயாவாதின்னா  குர்தா ,ஹாண்ட்பேக் ,சுஷ்மாக்கு ஒருகை ஸ்வெட்டர் ..இப்படி ஆளுக்கு ஒரு அடையாளம் இருக்கு .

ஜெவே முதல்ல கொபசெவா இருந்தப்ப ஸ்லிம்மா இருந்தாங்க - நல்ல டிஷ்யூ புடவை காட்டினாங்க ,அப்புறம் திடுதிடுப்புன்னு வெயிட்போட்டாங்களோ இல்லையோ கிரேப் புடவை ,கேப்புன்னு மாறினாங்க.அப்புறம் நாம சமீபமா பார்த்த புடவை ,நீள கை தொள தொள பிளவுஸ் ,மேட்சிங் வாட்ச் ,ஒத்தை கல் வைர கம்மல் + கொண்டையோட  அம்மாவா  மாறினாங்க .

இந்த சின்னம்மா வெறும் ஜெ வீட்டு சசியா இருந்தப்ப  பெரிய பட்டுப்புடவை ,வைர ஜிமிக்கி ,வைர மாலை ,வைர நெத்திச்சுட்டி  அடேயப்பா வைர ஒட்டியாணம்ன்னு கலக்கலா வந்தாங்க .அப்புறம் யார் கண்ணு பட்டுச்சோ , ஜெக்கு பிடிக்கலையோ என்னவோ ஒரு ஹவுஸ் வைப் காய்க்கடைக்கு வர ஸ்டைலேயே ரொம்ப நாளா  இருந்தாங்க .

ஜெவோட இறுதி ஊர்வலத்தப்ப இந்தம்மா மறுபடியும் லைம் லயிட்டுக்கு  வந்தாங்க .அப்ப ஒரு சுமார் ரக புடவை ,திப்பையா மேக் அப் ,பெர்ம் பண்ணின மெல்லிசு  ஜடைன்னு  நல்லாவே இல்ல . இதெல்லாம் நல்லா இல்லைன்னு நாம பேசிட்டிருக்கும்  போதே பதவி ஏற்பு அன்னைக்கு சட சடன்னு கெட் அப் மாத்திட்டாங்க.பட்டுப்புடவை ,காலர் வச்ச பிளவுஸ் ,அம்மா கொண்டை ,அம்மா கம்மல் ,அம்மா  வாட்ச்னு .எதையுமே அந்தம்மா கிட்ட விட்டுவைக்கல போல .இந்த கெட் அப்புல தேறினது புடவை மட்டும்தான் .

நம்ம அபிப்பிராயம் என்னனா இந்த ஸ்டைல ஏற்கெனவே ஜெவை பாத்துட்டோம் .அதோட (கோச்சுக்கிட்டாலும் பரவாயில்ல )இவங்க  ஜெ அளவுக்கு அழகில்ல ,ஆனா  exercise பண்ணுவாங்க போல .பிட்டா இருக்காங்க.
சாப்ட் கலர்ல நல்ல கிரேப் சில்க் கட்டலாம்.டெய்லர் சரியில்ல .பிளவுஸ் fitம் சரியில்ல மெட்டிரியலும் சரியில்ல .

அவசரமா ஒரு நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட்டா பாத்து ஹேர் ஸ்டைலை மாத்தணும் .பத்து விக் வச்சு பார்த்து நல்லா சூட் ஆகுற ஒண்ண செலக்ட் பண்ண வேண்டியது தானே ?அந்த பட்டர் பிளை வலை -கண்டிப்பா நோ .ஒரு சின்ன போனி டேல் நல்லா  இருக்கும்.

தானே மேக்கப் போட்டுக்குற அளவுக்கு என்ன முடை?கிளோஸ் அப்புல,  சின்ன பிள்ளைங்க மேக்கப் போட்டு விளையாண்ட மாதிரி திப்பை திப்பையா இருக்கு.கண்ணு ரொம்ப சின்னதா தெரியுது .ஒரு கண்ணாடி போட்டா நல்லா இருக்கும் .கம்மல் கொஞ்சம் பெருசு போடலாம் .

மொத்தத்துல ஒரு professional  மேக் ஓவர் தேவைப்படுது .அதி முக்கியமா இவங்களோட அடையாளமா சொல்ற மாதிரி ஏதாவது ஒரு accessory கண்டிப்பா வேணும் .

இதெல்லாம் செட் பண்ணிட்டு முடிஞ்ச அளவுக்கு பேச்சை குறைக்கிறது நல்லது .குரல் தொண்டை கட்டின நிர்மலா பெரியசாமி டப்பிங் பேசுன மாதிரி இருக்கு.அதோட தில்லு முல்லு சுப்பி  மாதிரி ழ ,ள லாம் கஸ்டப்படுது .

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா
நேத்து சசி ,இன்னைக்கு சின்னம்மா ,நாலாம் தேதிக்கு அப்புறம் யாரோ ...