Monday, 2 January 2017

சின்னம்மாவுக்கு சில அவசர ஆலோசனைகள் ...

பெரியம்மா (நன்றி திரு.பொன்னையன் )இறந்து ஒரு மாசம் கிட்ட ஆகப்போகுது .நாம எல்லாரும் எதிர்ப்பார்த்தப்படியே சின்னம்மா கனத்த மனசோட ? அதிமுகவில பொறுப்புக்கு வந்துருக்காங்க .இந்த நேரத்துல ,என்ன தான் யாரும் கிண்டல் பண்ணினாலும் அவங்களுக்குனு  ஒரு ஸ்டைல் of  dressing  தேவை .

இப்ப மம்தான்னா அந்த பெங்காலி புடவை ,ஹவாய் செருப்பு ,சோனியானா அந்த ஒரிசா காட்டன் புடவை ,மாயாவாதின்னா  குர்தா ,ஹாண்ட்பேக் ,சுஷ்மாக்கு ஒருகை ஸ்வெட்டர் ..இப்படி ஆளுக்கு ஒரு அடையாளம் இருக்கு .

ஜெவே முதல்ல கொபசெவா இருந்தப்ப ஸ்லிம்மா இருந்தாங்க - நல்ல டிஷ்யூ புடவை காட்டினாங்க ,அப்புறம் திடுதிடுப்புன்னு வெயிட்போட்டாங்களோ இல்லையோ கிரேப் புடவை ,கேப்புன்னு மாறினாங்க.அப்புறம் நாம சமீபமா பார்த்த புடவை ,நீள கை தொள தொள பிளவுஸ் ,மேட்சிங் வாட்ச் ,ஒத்தை கல் வைர கம்மல் + கொண்டையோட  அம்மாவா  மாறினாங்க .

இந்த சின்னம்மா வெறும் ஜெ வீட்டு சசியா இருந்தப்ப  பெரிய பட்டுப்புடவை ,வைர ஜிமிக்கி ,வைர மாலை ,வைர நெத்திச்சுட்டி  அடேயப்பா வைர ஒட்டியாணம்ன்னு கலக்கலா வந்தாங்க .அப்புறம் யார் கண்ணு பட்டுச்சோ , ஜெக்கு பிடிக்கலையோ என்னவோ ஒரு ஹவுஸ் வைப் காய்க்கடைக்கு வர ஸ்டைலேயே ரொம்ப நாளா  இருந்தாங்க .

ஜெவோட இறுதி ஊர்வலத்தப்ப இந்தம்மா மறுபடியும் லைம் லயிட்டுக்கு  வந்தாங்க .அப்ப ஒரு சுமார் ரக புடவை ,திப்பையா மேக் அப் ,பெர்ம் பண்ணின மெல்லிசு  ஜடைன்னு  நல்லாவே இல்ல . இதெல்லாம் நல்லா இல்லைன்னு நாம பேசிட்டிருக்கும்  போதே பதவி ஏற்பு அன்னைக்கு சட சடன்னு கெட் அப் மாத்திட்டாங்க.பட்டுப்புடவை ,காலர் வச்ச பிளவுஸ் ,அம்மா கொண்டை ,அம்மா கம்மல் ,அம்மா  வாட்ச்னு .எதையுமே அந்தம்மா கிட்ட விட்டுவைக்கல போல .இந்த கெட் அப்புல தேறினது புடவை மட்டும்தான் .

நம்ம அபிப்பிராயம் என்னனா இந்த ஸ்டைல ஏற்கெனவே ஜெவை பாத்துட்டோம் .அதோட (கோச்சுக்கிட்டாலும் பரவாயில்ல )இவங்க  ஜெ அளவுக்கு அழகில்ல ,ஆனா  exercise பண்ணுவாங்க போல .பிட்டா இருக்காங்க.
சாப்ட் கலர்ல நல்ல கிரேப் சில்க் கட்டலாம்.டெய்லர் சரியில்ல .பிளவுஸ் fitம் சரியில்ல மெட்டிரியலும் சரியில்ல .

அவசரமா ஒரு நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட்டா பாத்து ஹேர் ஸ்டைலை மாத்தணும் .பத்து விக் வச்சு பார்த்து நல்லா சூட் ஆகுற ஒண்ண செலக்ட் பண்ண வேண்டியது தானே ?அந்த பட்டர் பிளை வலை -கண்டிப்பா நோ .ஒரு சின்ன போனி டேல் நல்லா  இருக்கும்.

தானே மேக்கப் போட்டுக்குற அளவுக்கு என்ன முடை?கிளோஸ் அப்புல,  சின்ன பிள்ளைங்க மேக்கப் போட்டு விளையாண்ட மாதிரி திப்பை திப்பையா இருக்கு.கண்ணு ரொம்ப சின்னதா தெரியுது .ஒரு கண்ணாடி போட்டா நல்லா இருக்கும் .கம்மல் கொஞ்சம் பெருசு போடலாம் .

மொத்தத்துல ஒரு professional  மேக் ஓவர் தேவைப்படுது .அதி முக்கியமா இவங்களோட அடையாளமா சொல்ற மாதிரி ஏதாவது ஒரு accessory கண்டிப்பா வேணும் .

இதெல்லாம் செட் பண்ணிட்டு முடிஞ்ச அளவுக்கு பேச்சை குறைக்கிறது நல்லது .குரல் தொண்டை கட்டின நிர்மலா பெரியசாமி டப்பிங் பேசுன மாதிரி இருக்கு.அதோட தில்லு முல்லு சுப்பி  மாதிரி ழ ,ள லாம் கஸ்டப்படுது .

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா
நேத்து சசி ,இன்னைக்கு சின்னம்மா ,நாலாம் தேதிக்கு அப்புறம் யாரோ ...


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஆலோசனைகள்...!

பூங்குழலி said...

ஆமா -நம்மள விட்ட இதெல்லாம் சொல்ல யாரு இருக்கா

tony said...

😜😝😛😛😋😋.நீங்க மருத்துவர் தானே பூங்குழலி அந்த சின்ன அம்மாவ ,பிளாஸ்டிக் surgery பண்ணி பெரியம்மா ஆக்கிடலாம்? அதுவும் professional make over தானே?

tony said...

சின்னம்மா கூட கண்ணாடில நீங்க அவங்கள ரசித்த அளவுக்கு ரசித்திருகாது , அந்த அளவுக்கு குறிபெடுத்து ரசிதிருகிறீங்க?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

பூங்குழலி said...

அன்பின் tony ,ரசிப்பெல்லாம் இல்லை -இவ்வளவு நாளா திட்டம் போட்டு இப்படி சொதப்பல் கெட் அப்பா இருக்கேன்னு தான்

பூங்குழலி said...

நன்றி பாவாணரே