பத்மாவதி என்கிற பத்மாவத் பார்த்தாச்சு .
இவ்வளவு பிரச்சனை ஆகலைனா இந்த படத்த பாத்திருப்பேனாங்கறது சந்தேகம் தான் .
படம் ரொம்ப அழகா இருக்கு. ஒவ்வொரு சீனும் பாக்குறதுக்கு பிரமிப்பா இருக்கு .பாட்டெல்லாம் நல்லா இருக்கு.
அந்த ரஜபுத ராஜா -கொஞ்சம் பிலோ ஆவரேஜா தான் காமிக்கறாங்க மொதலேருந்தே .மொத பொண்டாட்டியோட முத்த தொலைச்சுட்டு திட்டு வாங்கிட்டு வாங்க போறாரு .அங்க போய் பத்மாவதிய கல்யாணம் பண்ணிட்டு வராரு .பாவம் அந்த முதல் பொண்டாட்டி .பாவம் பத்மாவதி .அந்தம்மா அழகுக்கு யாருக்காவது முதல் தாரமாவே வாக்கப்பட்டிருக்கலாம் .அதுக்கப்புறமும் எல்லா இடத்திலேயும் தப்பு தப்பாவே முடிவு எடுக்குறாரு .அவரோட எல்லா தப்பான முடிவுக்கும் பின்னால இருக்கிறது அவரோட ரஜபுத தர்மமாம் .அப்படி யாருக்கும் உதவாத சமயோசிதமா முடிவு எடுக்க விடாத தர்மம் என்ன தர்மமோ !
அந்த மொதல் பொண்டாட்டி பாவம் .எந்தூரு இளவரசியோ ?ஆனா தெளிவா யோசிக்குது . அப்புறம் பத்மாவதி .பாவம் அவ்வளவு அழகுக்கு அல்ப ஆயுசு .கல்யாணத்துக்கு முன்னால தைரியமா வேட்டைக்கெல்லாம் போகுது .ஆனதுக்கப்புறம் நாலு சீன்ல நல்லா டிரஸ் பண்ணிட்டு நல்லா டான்ஸ் ஆடுது .சுல்தான பாக்கப்போறேன் சுல்தான பாக்கப்போறேன்ன்னு அப்பப்ப கிளம்புது .நிப்பாட்டி விடுறாங்க .இப்படி நம்மள காதலிக்கிற ஆள் யாருனு பாக்கணுமேன்னு எந்த பொண்ணாருந்தாலும் ஆசை இருக்காதா என்ன ?அங்க போய் ஒருவழியா சேர்ந்தா சுல்தானோட பொண்டாட்டி விவரமா ,தப்பிக்க வைக்கிறேனுக்கு கழட்டி விடுது.(அந்த புள்ளையும் அழகாவே இருக்கு .)
என்னைய பொறுத்தவரைக்கும் மொத்த படத்துல பத்மாவதி பண்ண ஒரே உருப்படியான காரியம் அந்த ராஜகுருவோட தலையை கேட்டது தான் .
சுல்தானுக்கு வருவோம் .படத்துல நாயகன் இவரு தான் .ஆனா எதுக்கு இத்தனை சைக்கோத்தனம் ?அவரு சாப்பிடறதுலேருந்து எல்லாத்தையுமே ஒரு சைக்கோத்தனமா செய்ற மாதிரியே காண்மிக்கறாங்க .எப்பவுமே ஒருவித கருப்பு கலர் ட்ரெஸ்ஸே போட்டிருக்காரு .அழகா டிரஸ் பண்ணின வில்லன் இல்லவே இல்லையா என்ன ?அதுவும் ஒரு சாம்ராஜ்யத்தின் மன்னன் ?ரொம்ப அதீதம் அவரின் பாத்திரமாக்கம்.
சில சந்தேகம்
1.இந்த படத்துல ரஜபுத பெருமை படம் பூரா பேசுறாங்க ?அப்புறம் எதுக்கு இத்தனை போராட்டம் ?
2.கில்ஜியையும் முஸ்லிம்களையும் படம் ரொம்ப கீழ்த்தரமா சித்தரிக்குது .முறையா அவங்க தான் போராடி இருக்கணும் அவங்க ஏன் போராட்டம் பண்ணல ?
3.அவங்க சேனை கருப்பு கலர்ல தான் எப்பவுமே உடை அணிறாங்க .பிறைநிலா கொடி வேற .ஆனா ரஜபுத க்ரூப் பூரா வெள்ளை உடைல காவி கொடி ?
4.கில்ஜி ,வரலாற்றை மாத்தி எழுதுற மாதிரி சொல்ல வேண்டிய தேவை என்ன ?நாம கில்ஜிய பத்தி படிக்கறது தப்போன்னு ஒரு எண்ணத்தை உருவாக்கவா?
5.இந்த ராஜாவே பத்மாவதியை ரெண்டாம் தாரமா தான் கல்யாணம் பண்றாரு அப்புறம் கில்ஜிய என்ன குறை சொல்ல வேண்டிருக்கு ?
6.கில்ஜியோட வாழ்க்கையிலே பெரிய தோல்வி அது இதுன்னு ஸ்க்ரோல் ஓடுது ?அவருக்கு அந்த பத்மாவதி கிடைக்கல .அத தவிர வெற்றி அவரோடது தான் .இந்த சைடுக்கோ படு தோல்வி ,சர்வ நஷ்டம் இதுல என்ன பெருமைன்னு தெரியல?!
7.சாவுறதுக்கு கூட புருஷன் உத்தரவு கொடுக்கணுமாம்???உத்தரவு கேக்கும் போதே ராஜா மேலேயும் அவர் போர் திறமை மேலேயும் இருக்குற நம்பிக்கை பல்லிளிக்குது.
8..அந்த கடைசி சில காட்சிகள் கடுமையா கண்டிக்கப்பட வேண்டியவை .என்னதான் படத்துக்காக இருந்தாலும் .இத்தனை சுலோ மோஷன்ல இத்தனை நேரம் தீக்குளிப்புக்கு தயாராவதை காண்பிக்கணுமா என்ன ?அதிலேயும் ஒரு சிறுமியும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் இருப்பதா காண்மிக்கறாங்க .இதெல்லாம் எந்த வகைல நியாயம் ?படத்த தடை பண்றத இருந்திருந்தா நியாயமா அந்த கடைசி காட்சிகளுக்காக தான் தடை பண்ணியிருக்கணும் .

No comments:
Post a Comment