அழைப்பிதழ் கிடைத்தபடியால் இந்த நிகழ்வில் நேற்று பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது .பேசிய மருத்துவர்கள் அனைவரும் கலைஞருக்கு பல வருடமாக சிகிச்சை அளித்து கொண்டிருந்தவர்கள் .அதனால் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவர்கள் .
நெஞ்சில் நின்றவை
1. மரு .கோபால் என்பவர் தொடர்ந்து கலைஞரின் உடல்நலத்தை பராமரித்திருக்கிறார் .இவர் ஆலோசனை படி வேறு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள் .
2.எல்லோரும் கலைஞரின் மகள் செல்வி தன் தந்தையை கவனித்து கொண்டதை வியந்து பாராட்டினார்கள் .ஒருத்தர் உங்களை போல் எனக்கு ஒரு மகள் வேண்டும் என்று சொன்னார் .
3. கலைஞர் பல விதமான உடல்நலக் குறைவுகளால் பல நேரங்களில் அவதிப்பட்டிருக்கிறார் .ஆனால் இவற்றில் பலவற்றை நாம் அறிந்ததில்லை .இவற்றோடு கூடும் அவர் ஓய்வறியாமல் உழைத்தார் என்பது பிரமிக்கத்தக்க விஷயம் .சின்ன விஷயங்களுக்கு கூட நாம் ஐயோ அம்மா என்று சோர்வடைந்து போகிறோம் .
4.ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனைக்கு அமெரிக்க மருத்துவர் வந்த போது ,"not necessary "என்று மறுத்து விட்டாராம் .
5.பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு செய்யப்படும் "cochlear implant " அறுவை சிகிச்சையை அவர் இலவசமாக செய்ய ஒப்புக்கொண்டதையும், அதனால் 2000 குழந்தைகள் பயன் அடைந்ததையும்
UNஇல் சொன்ன போது "standing ovation "கிடைத்ததாக மரு.மோகன் காமேஸ்வரன் பெருமையாக சொன்னார் .
6.மருத்துவர்கள் பலருக்கு சரளமாக தமிழ் பேச முடியவில்லை .
எல்லாவற்றையும் விட இந்த நிகழ்வின் முக்கிய படிப்பினை இதுதான் .
கலைஞர் தன் உடல்நலத்தின் மீது பிரத்தியேக அக்கறை எடுத்திருக்கிறார்.பல அரசியல் தலைவர்கள் போல் பணி சுமையை காரணம் காட்டி அதை உதாசீனம் செய்யவில்லை .மருத்துவர்களின் அறிவுரையை கச்சிதமாக பின்பற்றியிருக்கிறார் .சின்ன விஷயமாக இருந்தாலும் அலட்சியபடுத்தாமல் எந்த நேரமாக இருந்தாலும் மருத்துவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார் .உடல் பயிற்சி நல்லது என்று சொல்லப்பட்டதால் மழையிலும் குடை பிடித்துக்கொண்டு வாக்கிங் போனாராம் .
செய்த எல்லாவற்றையும் திருந்த செய்தது போல ,இதையும் தன் கடமைகள் ஒன்றென அவர் கருதியிருக்கக் கூடும் .அதுவே இத்தனை ஆண்டுகள் அவரை நம்மோடு வைத்திருந்தது என்பது மிகையல்ல .

3 comments:
எங்களுக்கு கிடைத்திடாத அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
nanri
Good read. Try to keep on writing. Know your profession and family might take much if your time and your tweets might reach people lot easier than blogs but still I feel you like writing and so please post more blog.
Post a Comment