தெற்கு சுவர்கள் தாண்டி கிடக்கின்றன நீல மலைகள்
நகரின் கிழக்கணைத்து போகிறது வெள்ளை தண்ணீர்
நண்பனே , இங்கே பிரிகிறோம்
ஒருமுறை என்றென்றைக்கும்
பத்தாயிரம் மைல் போ ,
வேர்க்கொள்ளாத ஆற்றுப்புல் போல, மிதந்து..
ஓ !மிதக்கும் மேகங்களும் பயணியின் எண்ணங்களும்
ஓ !அஸ்தமனமும் பழைய நண்பனின் ஏக்கமும்
கையசைத்து பிரிகிறோம் வேறு திசைகளில்
நம் குதிரைகள் கனைக்கின்றன..மெல்ல மெல்ல ...
Taking leave of a friend ...
Li Po
Blue mountains lie beyond the north wall;
Round the city's eastern side flows the white water.
Here we part, friend, once forever.
You go ten thousand miles, drifting away
Like an unrooted water-grass.
Oh, the floating clouds and the thoughts of a wanderer!
Oh, the sunset and the longing of an old friend!
We ride away from each other, waving our hands,
While our horses neigh softly, softly . . . .