என் மகனோட பிறந்தநாள் ஏழாம் தேதி .வெளிய சாப்பிடலாம்ன்னு பார்பக்யூ நேஷன்ங்கற ஒரு இடத்துக்கு போனோம் .இது டி நகர் ,உஸ்மான் ரோடு ஜாய் ஆலுக்காஸ் முருகன் இட்லி கடை இரண்டுக்கு நடுவில ஒரு சந்துல இருக்கு .
முதலே டேபிள் முன்பதிவு செஞ்சுகிட்டு தான் போனோம் .
உள்ளே பெரிய வித்தியாசமா எதுவும் செய்யலைன்னா கூட நல்லா இருந்தது .சீட்டிங் ரொம்ப வசதியா இருந்தது .கொஞ்ச நெருக்கத்தில போட்டிருந்தாக் கூட கச்சடாவா இல்லாம போட்டிருந்தாங்க .
முக்கியமான விஷயம் என்னன்னா ,சாப்பாடு புஃபே முறையில் .ஒருத்தருக்கு 450ரூ .முதலா ஸ்டார்டர்ஸ் தராங்க .இதுக்கு அழகா நம்ம டேபிளேயே ஒரு சின்ன கிரில் வச்சிருக்காங்க .வெஜ் ( உருளைக் கிழங்கு ,காளான் ,கொடை மிளகாய் ) ,அப்புறம் நான் வெஜ் (சிக்கன் ,இறால் ) .இந்த ஐட்டங்கள் காலியாக ஆககொண்டு வந்து வச்சுக்கிட்டே இருக்காங்க .இது தவிர கபாப் ,குழந்தைகளுக்கு ஸ்மைலீஸ் இன்னும் வேற விஷயங்களும் வந்து செர்வ் பண்ணாங்க .டேபிள் மேல ஒரு கொடி வச்சிருக்காங்க .அத நீங்க மடக்கி விடுற வரைக்கும் இப்படி செர்வ் பண்ணுவாங்களாம் .
இதுக்கப்புறம் வழக்கமான புஃபே .ஆனாலும் நிறைய வெரைட்டி இருந்தது .குறிப்பா ஐஸ் கிரீம் ,சீஸ் கேக் எல்லாமே நல்லா இருந்தது .ரொம்ப அருமையா செர்வ் பண்ணினாங்க .உடனே உடனே கேக்கறதுக்கு முன்னாலேயே எல்லாமே கொண்டு வந்தாங்க .சாப்பாடும் ரொம்ப சுவையா இருந்தது .நிதானமா திகட்ட திகட்ட சாப்பிட்டோம் .
http://www.barbeque-nation.com/
Saturday, 19 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
தொலைபேசி எண் தரவேண்டாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://www.barbeque-nation.com/location.htm
கீழேயே லிங்க் கொடுத்திருக்கேனே
மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
BBQ எனக்கும் பிடித்தமான இடம். பெரும்பாலும் starters களிலேயே வயிற்றை நிரப்பிவிடுவேன்! :-)
வாழ்த்துக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்கும் நன்றி கவிநயா
அமுதா ,அண்ணாமலையான் ,சந்தனமுல்லை ..
உங்களின் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி ....
BBQ எனக்கும் பிடித்தமான இடம். பெரும்பாலும் starters களிலேயே வயிற்றை நிரப்பிவிடுவேன்
ஆமாம் சந்தனமுல்லை ,ஸ்டர்டர்ஸ் ரொம்பவே ருசியா இருந்துது .வயித்தோட இண்டு இடுக்கெல்லாம் கஷ்டப்பட்டு திணிச்சேன்
அன்பின் பூங்குழலி,
உங்கள் மகனின் பிறந்தநாளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் படிக்க, படிக்க ஆவலைத் தூண்டுபவையாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சக்தி அய்யா
Post a Comment