Saturday, 16 January 2010

பாட்டி

என் அப்பா பெயர் ஊரில் சொள்ளமுத்து என்றே பரவலாக அறியப்படுகிறது .ஊருக்குள் அதிகம் புழக்கத்தில் இருக்கும் பெயர் கூட .
அந்த நாட்களிலேயே என் தாத்தா அதை நவீனப்படுத்தி செல்வமுத்து என்று வைத்ததாக சொல்வார்கள் ."அவுக அய்யா சொள்ளமுத்த அப்படி ஸ்டைலா மாத்தி விட்டாக "என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் .

பாட்டியின் பெயர் பத்திரக்காளி .இது ஊர் அம்மனின் பேர்.ஆலடிப்பட்டியில் கூட இந்த பெயர் அத்தனை பரவலாக வைக்கப்பட்டதாக தெரியவில்லை .எனக்கு பாட்டியின் பெயரை சுருக்கி பத்ரா என்று வைக்க வேண்டும் என்று சொன்னதாக அம்மா சொல்வார்கள் . வைத்தால் பத்திரக்காளி என்று முழு பெயராக தான் வைக்க வேண்டும் என்று அப்பா சொல்லி விட்டதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டதாம்.

ஒருமுறை பாட்டி சென்னையில் இருந்த போது காய்ச்சல் வந்துவிட டாக்டரிடம் அழைத்து சென்றாராம் என் பெரிய அத்தை .பரிசோதனை எல்லாம் முடிந்து மருந்து எழுதும் முன் ,"உங்க பேர் சொல்லுங்கம்மா "என்று டாக்டர் கேட்கவும் "பத்திரக்காளி" என்று என் அத்தை சொல்ல வாயெடுக்கும் முன் ,"பத்மாவதி "என்றாராம் பாட்டி சட்டென்று .


3 comments:

ஆடுமாடு said...

//சொள்ளமுத்து//

சுடலைமுத்துங்கறதைதான் சொள்ளமுத்தும்பாங்க ஊர்ல.

எங்கக்கா பேரு அடைக்கலதேவி அய்யனார் செல்வி. உங்க ஊரு பக்கத்துலதான் இருக்கா. அதை சுருக்கி அய்.செல்வின்னு வச்சுக்கிட்டா. ஊர்ல நம்ம மக்கள்லாம் அவளை கூப்பிடறது.. ஆய் செல்வி.
கொடுமைங்க!

பூங்குழலி said...

சுடலைமுத்து -சொள்ளமுத்து -செல்வமுத்து நல்லா இருக்கே !

ஆய் செல்வி

பேசாம அவங்க அய்யனார் செல்வியாவே இருந்திருக்கலாம் .

எந்த ஊர்ல இருக்காங்க ?

ஆடுமாடு said...

//எந்த ஊர்ல இருக்காங்க ?//

ஆலங்குளம்.