Tuesday, 23 February 2010

பாத்திரம் அறிந்து

சிகிச்சைக்காக புதிதாக வந்த ஒரு பெண் .நிறைய படித்தவர் .பல வருடங்களாக தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியும் என்று கூறினார் ,கிட்டத்தட்ட பத்து வருடங்களாக .ஆனால் தான் எந்த சிகிச்சையும் இதுவரை செய்து கொள்ளவில்லை என்றும் கூறினார் .

இவரின் கணவர் திருமணம் ஆகி மூன்று வருடங்களிலேயே இறந்துவிட்டார் .கணவருக்கு எச்.ஐ.வி இருப்பது இவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியுமாம் .தெரிந்தும் ஏன் அவரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு ,பாவம் என்று செய்து கொண்டேன் என்று கூறினார் ."சரி பாவம் என்று திருமணம் செய்து கொண்டீர்கள் ,எதற்காக காண்டம் உபயோகிக்கவில்லை ?"என்று கேட்டேன் ."அவர் செத்து போய்ட்டா ,ஒடனே நானும் செத்து போயிடனும்ன்னு நெனைச்சேன் .அதனால எச்.ஐ.வி வராம பாத்துக்கனும்ன்னு தோனல .அவரு மூனே வருஷத்தில செத்து போனப்ப தான் பயமா இருந்துது .அப்புறமும் ஒடம்பு நல்லாயிருந்த வரைக்கும் பெரிசா ஒண்ணும் தோனல .ஆனா இப்ப நெனைக்கும் போது இப்படி முட்டாளா இருந்திருக்கோமே ன்னு வருத்தமா இருக்கு .எதுக்காக அப்படி அன்னிக்கி முடிவு எடுத்தேன்னு யோசிக்கவே இப்ப வருத்தமா இருக்கு .எங்க வீட்டில எல்லாருக்கும் பிடிச்ச பிள்ள நான் .அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பாடுபடுவாங்களோ.."என்று சொல்லி ஓவென்று அழுதார் .


3 comments:

ரிஷபன் said...

எதுக்காக அப்படி அன்னிக்கி முடிவு எடுத்தேன்னு யோசிக்கவே இப்ப வருத்தமா இருக்கு .

அட கடவுளே..

அண்ணாமலையான் said...

என்னத்த சொல்ல?

பூங்குழலி said...

என்னத்த சொல்ல ...ஆமாம் இனிமேல் தொடர்ந்து சிகிச்சைக்கு வாங்க ன்னு சொல்றத தவிர வேறு ஒண்ணும் இல்லை சொல்ல