மரங்கள் அடர்ந்த தெருவில்
பறவைகளின் பேரிரைச்சல் கேட்காவிட்டாலும்
அவற்றின் மெல்லிய கீச்சுக் குரல்களேனும்
கேட்டுக் கொண்டே தான் இருக்கும்
அவ்வழியே கடக்கும் போது
பலர் மீதில்லாவிட்டாலும்
சிலர் மீதேனும்
அவை மென்று கழித்ததன்
எச்சம் படக்கூடும்
அதை "சீ" என்று துடைத்துவிட்டே
கடப்பவர் பலரெனினும்
நின்று அப்பறவைகளின் மேல்
கல்லெறிந்து போகிறவர்களும் உண்டு
ஏதென்று அறியாமல் பறவைகளும்
பேரிரைச்சல் எழுப்பி அடங்கும்
பறவைகளின் பேரிரைச்சல் கேட்காவிட்டாலும்
அவற்றின் மெல்லிய கீச்சுக் குரல்களேனும்
கேட்டுக் கொண்டே தான் இருக்கும்
அவ்வழியே கடக்கும் போது
பலர் மீதில்லாவிட்டாலும்
சிலர் மீதேனும்
அவை மென்று கழித்ததன்
எச்சம் படக்கூடும்
அதை "சீ" என்று துடைத்துவிட்டே
கடப்பவர் பலரெனினும்
நின்று அப்பறவைகளின் மேல்
கல்லெறிந்து போகிறவர்களும் உண்டு
ஏதென்று அறியாமல் பறவைகளும்
பேரிரைச்சல் எழுப்பி அடங்கும்
கல்லெறிய முடியாமல் ....
2 comments:
உண்மை தான் அக்கா... ரொம்ப நாள் ஆச்சு உங்க வலைப்பூவுக்கு வந்து... இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு... பாவம் பறவைகள்...
வருகை தந்ததற்கும் படித்ததற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கவிநா
Post a Comment