Wednesday 7 July 2010

கற்பகசித்தர்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜோசியர்கள் ஒவ்வொரு பரிகாரம் சொல்கிறார்கள் .ஒரு காலத்தில் நாகதோஷ பரிகாரம் வெகு பிரசித்தியாக இருந்தது .அதை செய்ய காளஹஸ்திக்கு எல்லோரும் போனார்கள் ,போகிறார்கள் .பின்பு ,ஏதோ முன்னோர் வழிபாடு சரியில்லை என எல்லோரும் திதி திவசம் என்று காக்கைகளை பிடித்துக் கொண்டிருந்தார்கள் .பின்னர் ஆரம்பித்தது குல தெய்வ வழிபாடு .இந்த காலகட்டத்தில் தான் அம்மாவுக்கு நாங்கள் குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது சங்கடமாக போனது .


எங்கள் அப்பா வீட்டிலோ எல்லோரும் நாத்திகர்கள் .இதில் எங்கள் குல தெய்வம் கருப்பஸ்தர் என்று எப்போதோ எங்கள் அத்தை சொன்னதாக ஞாபகம் .இதுவே தப்பாகி அவர் பெயர் கற்பகசித்தன் என்று தெரிய வந்தது .தெரிய வந்ததும் அம்மா செய்த முதல் காரியம் அவருக்கு வெள்ளியில் கிரீடம் செய்து வைத்தது.அதோடு எங்களை விட்டுவிடவில்லை கற்பகசித்தர் .அவரின் மேல் அம்மாவிற்கு ஏற்பட்ட பரிவு அவருக்கு உற்சாகமளித்திருக்க வேண்டும் .

அங்கிங்கே விசாரித்ததில் கற்பகசித்தரைப் பற்றிய இன்னமும் பல செய்திகள் தெரிய வந்தன .அவரின் பூர்வீகம் ,அவரின் சொந்த ஊர் ,அவர் சார்ந்த சாபம் ,அது மட்டுமல்ல அவர் எங்களின் குல தெய்வம் மட்டுமல்ல ,எங்களின் மூதாதையரும் கூட என்பதும் .இதையெல்லாம் அம்மா பக்தி பரவசத்துடன் சேகரித்துக் கொண்டிருக்க ,அப்பா இதையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதினார் ,"ஆலடி கண்ட கற்பகசித்தன் " என்று பெயரிட்டு .இதை இந்த ஆண்டு ஆலடிப்பட்டி வைத்தியலிங்கச் சாமி கோவில் சித்திரை திருவிழாவின் போது வெளியிட்டோம் .அதோடு அனைவருக்கும் இலவசமாக ஒரு புத்தகம் கொடுத்தும் ஆயிற்று .ஊர் வரலாற்றை பதிவு செய்ததோடு அல்லாமல் அதை தன் ஊரிலேயே வெளியிட்ட சந்தோசம் அப்பாவிற்கு.


6 comments:

Advocate P.R.Jayarajan said...

நல்ல அனுபவப் பதிவு.
புத்தகம் எழுதுவது மிக மகிழ்ச்சியான பணி

ரிஷபன் said...

ஊர் வரலாற்றை பதிவு செய்ததோடு அல்லாமல் அதை தன் ஊரிலேயே வெளியிட்ட சந்தோசம் அப்பாவிற்கு.
இம்மாதிரி பதிவுகள் இருந்தால்தான் அவரவர் பார்வையில் ஊர் வரலாறு பின்னாட்களில் தெரிய வரும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இன்னும் நிறைஇய புத்தகங்கள் பூக்கட்டும் பூங்குழலி..

வாழ்த்துகள்.

பூங்குழலி said...

//நல்ல அனுபவப் பதிவு.//

நன்றி திரு.ஜெயராஜன்

பூங்குழலி said...

//இம்மாதிரி பதிவுகள் இருந்தால்தான் அவரவர் பார்வையில் ஊர் வரலாறு பின்னாட்களில் தெரிய வரும்.//

சரிதான் ரிஷபன் ,இத்தனை வருடங்களில் எங்களுக்கே இந்த கதையெல்லாம் சமீபத்தில் தான் தெரிய வந்தது

பூங்குழலி said...

//இன்னும் நிறைஇய புத்தகங்கள் பூக்கட்டும் பூங்குழலி..

வாழ்த்துகள். //

மிக்க நன்றி சாந்தி ,அப்பா இன்னமும் நிறைய எழுத வேண்டும் என்றே நாங்களும் சொல்லி வருகிறோம்