Sunday 2 September 2012

மழை







வெயில் தகித்த ஒரு கடும்நாளில்
எதிரெதிராய்  வீதியில்
நானும் வெயிலும்


கண் எரித்து
முகம் கருக்கி
பாதம்  சுட்டு
எக்காளமாய்
என் தாடை சுடும்
பொல்லா வெயில்


கண் மறைத்து
நிலம் நோக்கி
வியர்வை குளித்து
தாகித்து   நான் ....
இன்னும்  கிட்டத்தில்
எனை சாடும் வெயில்


என் தவிப்புணர்ந்து
வந்து
சடசடவென பொரிந்து
வெயில் விரட்டி
வியர்வை களைந்து
சட்டென என் முகம் மறைக்கும்
குடையாய்
மழை




10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// சட்டென என் முகம் மறைக்கும்
குடையாய்
மழை /// அருமை...

விரைவில் எங்கள் ஊரிலும் மழை வரட்டும்...

பூங்குழலி said...

உங்களையும் அடையட்டும் மழை ..மிக்க நன்றி தனபாலன்

Yaathoramani.blogspot.com said...

இறுதி வரிகள் என்னுள்ளும்
மழைபெய்யச் செய்து போனது
மனம் தொட்டப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

மழை போலவே சிந்தை குளிர்வித்து போனது உங்கள் வாழ்த்து ..நன்றி ரமணி அவர்களே

MARI The Great said...

இறுதி வரிகளில் குளிர்ச்சி!

Seeni said...

ada!

பூங்குழலி said...

எப்போதும் போல அட சொல்ல வைக்கும் உங்கள் பாராட்டுக்கு நன்றி சீனி

பூங்குழலி said...

மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்

எல் கே said...

மழைக்காக எங்கும் ஒருவரின் உணர்வுகள்..

பூங்குழலி said...

மழை வந்த நாளின் உணர்வுகள் ...மிக்க நன்றி LK