Thursday, 14 March 2013

ரசவாதம்

மஞ்சள் நனைத்த டெய்சியை  
மழைக்கு ஏந்தும் 
வசந்தம் போல 
என் இதயத்தை ஏந்துகிறேன் ,
ஒரு அழகிய கோப்பையாயிருக்கும் 
என்  இதயம் 
அதில்  ஏந்தியிருப்பது வலியே  எனினும் 

ஏனெனில் ,
ஏந்தும் துளியிலெல்லாம்  வர்ணம் பூசும் 
மலரிடம்  இலையிடம்  கற்றுக்கொள்வேன் 
உயிரற்ற வைன்னான  விசனம் -அதை 
உயிர்ப்புள்ள தங்கமாக  மாற்ற 

 

Alchemy

By Sarah Teasdale 

 I lift my heart as spring lifts up
A yellow daisy to the rain;
My heart will be a lovely cup
Altho' it holds but pain.

For I shall learn from flower and leaf
That color every drop they hold,
To change the lifeless wine of grief
To living gold.



7 comments:

jeevan said...

அருமை சகோ

பூங்குழலி said...

நன்றி சகோ

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அருணா செல்வம் said...

குழலி மேடம்...

இந்தக் கவிதை ஏதோ புரியாதது போல் இருந்தாலும் எதையோ புரியவைக்கிறது.

நன்றி.

மகேந்திரன் said...

///ஏந்தும் துளியிலெல்லாம் வர்ணம் பூசும்
மலரிடம் இலையிடம் கற்றுக்கொள்வேன் ///

வாழ்வியலை நமக்கு இயற்கை உணர்த்தும் பாடம்....

பூங்குழலி said...

படித்தவுடன் மனதை கவர்ந்தது இந்த கவிதை .நன்றி அருணா (ஆனால் குழலி போதுமே ,இந்த மேடம் வேண்டாமே !)

பூங்குழலி said...

மிக சரியாக சொன்னீர்கள் மகேந்திரன் .மென்மையான சொற்கள் கோர்த்து அழகிய தத்துவம் சொல்லும் கவிதை