Monday, 6 January 2014

இன்றிரவு

    

வளையும் தங்கமலராக  நிலா 
அசைவில்லாமலும்  நீலமாகவும்   வானம்
வானம் அணைக்க ஆனது நிலா
நீ அணைக்க நான்


காம்பில்லாத மலராக  நிலா  
ஒளிர்கிறது வானம்
நித்தியம் அவர்களுக்கானது
இன்றிரவு நமக்கு



To-night
By Sara Teasdale 
The moon is a curving flower of gold,
The sky is still and blue;
The moon was made for the sky to hold,
And I for you.

The moon is a flower without a stem,
The sky is luminous;
Eternity was made for them,
To-night for us.

தந்தவன்

என் கால்களில் கடின காலணிகள் கட்டினாய் 
ரொட்டியும் வைனும் எனக்கு நீ தந்தாய் 
தந்து என்னை 
சூரியனுக்கும் நட்சத்திரங்களுக்கும் கீழே அனுப்பினாய் 
எல்லா உலகமும் எனதென்பதால் ..

ஓ ,காலணிகளிலிருந்து என் கால்களை எடுத்து விடு 
என்ன செய்கிறோம் என்று அறியாதிருக்கிறாய் 
ஏனெனில் 
என் எல்லா உலகமும் உன் கரங்களிலிருக்கிறது
என் சூரியனும் நட்சத்திரங்களும் நீ

 

 

The Giver
By Sara Teasdale
You bound strong sandals on my feet,
You gave me bread and wine,
And sent me under sun and stars,
For all the world was mine.

Oh, take the sandals off my feet,
You know not what you do;
For all my world is in your arms,
My sun and stars are you.

இரவில்

காதல் சொன்னது ,
"இன்னமும் உறங்காதே ,என்னை  நினைத்திரு "
உறக்கம் ,"விடியும் வரையும் கண்மூடி இரு "
ஆனால் ,
கனவுகள் வந்தன 
உறக்கத்திற்கும் காதலுக்கும் 
தத்தம் வழி தந்து ..
சிரித்தபடியே ....

 

 

At Night

By Sara Teasdale 

Love said, "Wake still and think of me,"
Sleep, "Close your eyes till break of day,"
But Dreams came by and smilingly
Gave both to Love and Sleep their way.

Friday, 3 January 2014

இன்றும்

ஒரு பெண் .வயது முப்பது இருக்கும் .எச் ஐ வி சம்பந்தமான ஒரு என் ஜி ஓவில் பணிபுரிபவர் .அதனால் இவர் நோய் பாதிப்பு இருப்பவர் என்பதெல்லாம் ஊரில் எல்லோரும் அறிந்ததே.அம்மாவுடன்   கிராமத்தில் வாழ்பவர் .முகமெல்லாம் காயமாக இன்று வந்து சேர்ந்தார் .

"நானும் எங்கம்மாவும் தனியாக  தான் இருக்கோம் மேடம் .எனக்கு எச் ஐ வி இருக்கறது ஊருல எல்லாருக்கும் தெரியும் .ஒரு நாள் ராத்திரி திடீருன்னு முகத்துல ஏதோ எச்சு பட்ட  மாதிரி இருந்தது .வீட்டுல ஒரு பூனை இருக்கு .நா அதுதான்னு நெனச்சு  கண்முழிச்சு பாத்தா ,அடுத்த தெருவுல இருக்காரு ஒரு தாத்தா .அவரு வந்து முத்தம் கொடுத்துட்டு  இருக்காரு .நா  உடனே கோபமா ஊர கூட்டுனா ,ஊருல இருக்கவங்க முக்காவாசி  பேரு அவங்க சாதிக்காரங்க .அவங்க எல்லாரும் சேந்து என்னைய சண்டை புடிச்சாங்க .இதையெல்லாம் பெருசாக்காதேன்னு சத்தம் போட்டாங்க .

நா கேக்காம போலீசுல கம்ப்ளைன்ட்  கொடுத்திட்டேன் .அவங்க சாதிக்காரங்க
எல்லாருமா சேந்து என்னைய அடிச்சு போட்டாங்க .அந்த ஊருல வைத்தியம் கூட பாக்க முடியல .பக்கத்துக்கு டவுன்ல ஆயிரம் ரூபா வாடகை கொடுத்து வீடு புடிச்சு தங்கி இருக்கேன்.என்ன பண்றதுன்னே புரியல . "

என்ன சொல்வது ?


இறுதியில்

எப்போதும் சொல்ல முடியாதிருந்ததெல்லாம்
எப்போதும் செய்ய முடியாதிருந்தெல்லாம்
ஒரு வழியாக  நமக்காக காத்திருக்கின்றன
எங்கோ சூரியனுக்கு பின்

விடுப்பதற்காக இதயம் உடைத்ததெல்லாம்
வலியின்றி நமதாகும்
நாம்  லேசாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம் .சிறுமிகள்
மழைக்குப் பின் பூப்பறிப்பதை போல

இறுதியில் அவை நமதாகும் போது
ஒருவேளை  ஒருவழியாக
வானம் நமக்காக திறக்காது
சொர்க்கமும் நம் அழைப்புக்கு இணங்காது



In  the end
By SaraTeasdale


All that could never be said,
All that could never be done,
Wait for us at last
Somewhere back of the sun;

All the heart broke to forego
Shall be ours without pain,
We shall take them as lightly as girls
Pluck flowers after rain.

And when they are ours in the end
Perhaps after all
The skies will not open for us
Nor heaven be there at our call.

Thursday, 2 January 2014

அந்தியில்

கனவுபோல் கூரைகள் மேல்
வசந்த குளிர் மழை விழுகிறது
வெளியே ஒற்றை மரத்தில்
ஒரு பறவை அழைக்கிறது ,அழைக்கிறது

மெதுவாக மண் மேல்
இரவின் இறக்கைகள் விழுகிறது
என் இதயம் ஒற்றை மரத்து பறவை போல் 
அழைக்கிறது ,அழைக்கிறது, அழைக்கிறது ....

 
Twilight
By Sara Teasdale
Dreamily over the roofs
The cold spring rain is falling,
Out in the lonely tree
A bird is calling, calling.

Slowly over the earth
The wings of night are falling;
My heart like the bird in the tree
Is calling, calling, calling.

கனவுகளின் வீடுகள்

     


என் வெற்று கனவுகளை எடுத்தாய்
எடுத்ததனைத்தும்  நிரப்பினாய்
மென்மையால்  மேன்மையால் 
ஏப்ரல் மற்றும் சூரியனால்

 
என் எண்ணங்கள்  அடரும் 
என் பழைய வெற்றுகனவுகள்
நிரம்ப சந்தோஷங்கள் நிறைந்தவை
ஒரு பாடல் கூட கொள்ள முடியாமல்

ஓ ! அந்த  வெற்று கனவுகள் மங்கலானவை
அந்த  வெற்றுகனவுகள் விசாலமானவை
என் எண்ணங்கள் ஒளிய
இனிய நிழலான  வீடுகளானவை 

ஆனால் ..நீ என் கனவுகளை எடுத்து விட்டாய்
எடுத்து  என்  கனவுகளை   நனவாக்கினாய்
என் எண்ணங்கள் விளையாட இடமில்லை இன்று
செய்யவும்  இன்று ஒன்றுமில்லை



Houses of Dreams 
By Sara Teasdale

You took my empty dreams
And filled them every one
With tenderness and nobleness,
April and the sun.

The old empty dreams
Where my thoughts would throng
Are far too full of happiness
To even hold a song.

Oh, the empty dreams were dim
And the empty dreams were wide,
They were sweet and shadowy houses
Where my thoughts could hide.

But you took my dreams away
And you made them all come true --
My thoughts have no place now to play,
And nothing now to do.