நேற்றைய தினத்தில் நடந்தது இது .
கணவனும் மனைவியாக வந்திருந்தனர் .விவசாயக் குடும்பம் .மனைவி அளவாக பேசுவார் .கணவர் நிறைய பேசுவார் ."நல்லா இருக்கீங்களா ?"என்று நான் கேட்டது தான் தாமதம் ,"என்னவோ போங்க ,என்னத்த நல்லா இருக்க .போட்டதொண்ணும் சரியா மொளைக்கல .வேல பாக்க ஆள் கெடைக்க மாட்டேங்குறாங்க .ஒரு ஏக்கருக்கு நாப்பது மூட்டையாவது நெல் வெளையனும் .வெளையல.காய்கறி போட்டோம் .சொர காயெல்லாம் பிஞ்சில வெம்பி விழுகுது .அதிகாரிகளுக்கும் என்னன்னே புரியல .இனிமே தான் என்ன நோய்ன்னு கண்டுபிடிச்சு மருந்து கண்டுபிடிக்கணுமாம் .அதுவரைக்கும் பயிறு தாங்குமா என்ன ?
தண்ணி கெடைக்க மாட்டேங்குது .தண்ணிக்கு தகராறு வந்து ,பங்காளிகளே போன வருஷம் என்னோட மூணு ஏக்கர் பயிர கொளுத்தி போட்டாங்க .நெலம் வேற நல்லா இல்லையாம் .மூணு அடி தோண்டி டெல்லி வரைக்கும் அனுப்பி வச்சேன் .ஒன் நெலம் பூரா வெசமா இருக்குன்னு சொல்லிட்டாங்க.மாற நூறு வருஷம் ஆகுமாம் .ஒரம் ,அதுலேயும் கலப்படம் செய்யறனால இப்படியாம்.இது கம்மியா தான் மகசூல் தரும்னு சொல்லிட்டாங்க .
பக்கத்துல ஒருத்தன் பத்து ஆடு வச்சிருந்தான் .திடீருன்னு பத்தும் செத்து போச்சு .ஒண்ணு ஆறாயிரம் பெறும் .அப்படியே நொடிச்சு போய்ட்டான் .மாடெல்லாம் கோமாரி நோய் வந்து சாகுது .ராத்திரியில உயிரோட இருக்குற மாடு காலையில பாத்தா செத்து கெடக்குது .அதிகாரிகளும் என்னெனவோ செஞ்சு தான் பாக்குறாங்க .ஒண்ணும் பண்ண முடியல .இவ்வளவு வருஷத்துல இப்படி நெலம் ,ஆடு ,மாடு எல்லாம் ஒரே நேரத்துல வீணா போயி பாத்ததில்ல.ஏதோ பாம்பு கடிச்சு சாகும்பாங்க அவ்வளவுதான் .
இப்ப வந்து இன்சூரன்ஸ் எடுக்க சொல்றாங்க . இனி எடுத்து என்ன பண்ண ?ஏதோ மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு பேசிட்டேன் .ரொம்ப பேசுறானேன்னு நெனச்சிற போறீங்க !"
இவர்களுக்கு முன்பு வந்த ஒருவர் ,அதே ஊர்க்காரர் தான் .ஆனால் அவர் பொதுவாக அதிகம் பேச மாட்டார் .அதிசயமாக இந்த முறை "மல்லாட்ட போட்டு அறுக்க முடியாம கெடக்குது .மூட்ட 2500 ரூவாய்க்கு வாங்கிட்டு வந்து வெதச்சது .இப்ப கவர்ன்மெண்ட் வெறும் 3200 ரூவா வெல வச்சிருக்காங்க.அந்த வேலைக்கு வித்தா போட்டதே கூட எடுக்க முடியாது .என்ன செய்யனே தெரியல .எல்லாரும் இந்த ஆன்லைன்ல பதுக்கிட்டு இப்ப விக்குறாங்க .இந்த ஆன்லைன் வியாபாரத்தால தான் வெவசாயமே ஒழிய போகுது,"என்று சொல்லிவிட்டு கிளம்பி போனார் .
போனவுடன் திரும்பி வந்தவர் ," ஒங்களுக்கு அடுத்த தடவ வரும் போது கொஞ்சம் எடுத்திட்டு வரேன் .ஒங்களுக்கு பச்ச பிடிக்குமா ,காஞ்ச கடலை பிடிக்குமா ?விடுங்க ரெண்டுலயும் கொஞ்சம் எடுத்திட்டு வரேன் ."

14 comments:
வணக்கம்
கதையின் கருத்தாடல் அருமை வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விவசாயிகளுக்குதான் எவ்வளவு பிரச்சனைகள்! மண்ணையே நம்பி வாழும் அவர்களை மண்ணும் கைவிட்டுவிடுவது மிகவும் வேதனை. மண்ணின் ஈரம் காய்ந்துபோனாலும் மனத்தின் ஈரம் மாறாதவர்கள் என்பதை கடைசி பத்தி காட்டுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் உழைப்புக்கு ஏசி அறையில் அமர்ந்திருக்கும் இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்வது கொடுமையிலும் கொடுமை.
இப்ப வந்து இன்சூரன்ஸ் எடுக்க சொல்றாங்க . இனி எடுத்து என்ன பண்ண ?ஏதோ மனசுக்கு ஆறுதலா இருக்கும்///ஆமாம் எல்லோருமே யோசிக்கணும்
இனி எடுத்து என்ன பண்ண...?
நிலைமை வருந்த வைக்கிறது...
அவர்கள் விளைவிப்பதற்கே கடன் வாங்கும் நிலையில் இன்சூரன்ஸும் செய்ய எங்கே செல்வார்கள்.. நம் அரசின் கொள்கைகள் கடைசி உழவன் அத்தொழிலை விட்டு வெளியேறும் வரை வேடிக்கைதான் பார்க்கப்போகிறது...
விவசாயம் நன் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிவிட்டு அதை ஒடித்துவிட்டு முடமாகும் வேலையைத் தான் அரசாங்கம் செய்கிறது..பாவம் அறியாமல் பயன்படுத்திய உரம் நிலத்தைக் கெடுத்துவிட்டதே...வீட்டுச் சமையல் கழிவுகளைப் போட்டுக்கொண்டிருந்தால் சரியாகாதா?
அரசாங்கம் உணர்ந்துகொள்ளட்டும்..விவசாயமும் விவசாயிகளும் ஒளிபெறட்டும்..
யானைக்கொரு காலம் வந்தால் பூனைகொரு காலம் வரும் என்பார்கள் அரசர்கள் காலத்தில் பாது காப்பிற்கு யானை படை இருந்தது இன்று அமைச்சர்களின் பாது காப்பிற்கு பூனை படை உள்ளது. அது போல சோறு கிடைக்காத காலம் ஒன்னு வரும் அப்ப காச யாரும் திங்கமுடியாது அந்த நிலையில விவசாயத்திற்கு ஒரு வலுவான எதிர்காலம் நிச்சயம் வரும் எல்லாம் முன்பனம் கொடுத்து பயிரிடச்சொல்லுவாங்க.
நன்றி ரூபன் .பேஷன்ட்டுகளுடன் உரையாடுவது தினம் தினம் ஒரு புது அனுபவம் தான்
ஆமாம் கீதமஞ்சரி .விவசாயம் பொய்ப்பதன் வேதனையை நேற்றே உணர்ந்தேன்
விவசாயம் ஏற்றம் பெறுவது குறித்து அனைவரும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது கண்ணதாசன் .இல்லையேல் உணவின்றி எல்லோரும் திண்டாட வேண்டியிருக்கும் போலிருக்கிறது
ஆமாம் தனபாலன் . பாவம் அவர்கள் வெறுத்து பேசும் போது வருத்தப்படுவதை தவிர என்ன செய்ய முடிகிறது
ஆமாம் எழில் ..திட்டமிட்டே செய்கிறார்கள் விளைநிலங்களை காசாக்க
விவசாயம் ஏற்றம் பெற வேண்டும் என்ற உங்கள் வாக்கு பலிக்கட்டும் கிரேஸ்
"அது போல சோறு கிடைக்காத காலம் ஒன்னு வரும் அப்ப காச யாரும் திங்கமுடியாது அந்த நிலையில விவசாயத்திற்கு ஒரு வலுவான எதிர்காலம் நிச்சயம் வரும் எல்லாம் முன்பனம் கொடுத்து பயிரிடச்சொல்லுவாங்க."
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ராமஜெயம்
Post a Comment