Sunday, 9 February 2014

மனதில் புற்று

எச்.ஐ வி தாக்குதல் இருப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம் .இந்த சந்தேகத்தினால்  கருப்பை புற்றுநோய்  என்று கண்டறியப்பட்ட போது எச் ஐ வி பரீட்சையும் செய்யப்பட  இந்த பெண்ணுக்கு அதுவும் இருப்பது தெரிய வந்தது ,சென்னையின் பிரபல புற்றுநோய்க்கான மருத்துவமனை ஒன்றில் .

கிராமத்திலிருந்து வந்து புற்று நோய் சிகிச்சைக்கென சென்னையில் இருக்கும் இவருக்கு மருத்துவமனையின் சார்பில் சிகிச்சை ,தங்குமிடம் ,உணவு என்று எல்லாமே இலவசமாகவே செய்யப்படுகிறது .ஆனாலும், மருத்துவர்கள் ,பெரும்பாலான செவிலியர் என்று எல்லாருமே அன்பாக இருந்தாலும் ஒருவர் மட்டும் வார்த்தையால் தன்னை நோகச் செய்வதாக சொல்லி அழுதார் அந்த பெண் ."தேள் மாதிரி வார்த்தையால கொட்டுறாங்க மேடம் .எனக்குன்னு தனியா ஒரு ரூம் கொடுத்திருக்காங்க ,அதிலே இருந்து நான் வெளியவே வரக்கூடாது .வந்துட்டா ஒனக்கிருக்கிற நோய் எல்லாருக்கும் வரணுமா ?உள்ள இருக்க முடியாதான்னு சத்தம் போடுறாங்க .யார் கிட்டயாவது பேசுனா ஒண்ணைய அசிங்கப்படுத்தவாங்குறாங்க ?

நானும் எவ்வளவு நேரம் தான் அந்த ரூம்குள்ளேயே அடைஞ்சு கெடக்க முடியும் ?அன்னைக்கு ஒருத்தங்க இந்த ஆரஞ்சு பழத்த உரிச்சு கொடுன்னு கேட்டாங்க .நானும் யதார்த்தமா உரிச்சு கொடுத்தேன் .பாத்துட்டு ஒரே திட்டு.அவங்க தானே கொடுத்தாங்க ,நா என்ன செய்யட்டும்ன்னு கேட்டா 
அறிவில்லையான்னு கேக்குறாங்க .எம்பிள்ளைகல நெனச்சுக்குவேன் மேடம் .இன்னமும் ரெண்டு வாரம் தான் .அதுக்கப்புறம் ஊருக்கு  போயிருவேன் .அங்க என்ன காத்திட்டு இருக்கோ தெரியல .பயமா இருக்கு .ஆஸ்பத்திரியிலேயே இப்படி நடத்துறாங்களே ,அது கிராமம் ,அங்க என்ன செய்வாங்களோ ?"



5 comments:

துளசி கோபால் said...

தலைப்பு ரொம்பச் சரி!

இப்படியும் மனிதர்கள் இருக்காங்களே:(

கீதமஞ்சரி said...

சமூகம் நிறைய மாறவேண்டும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்குதான் மற்றவர்களை விடவும் அதிகப்படியான விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். எத்தனைப் பேர் அன்பாக இருந்தாலும் ஒருவரது ஆறுதலற்ற செய்கைதானே நோயாளியில் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அப்பெண்ணின் பயம் நியாயமானதே...

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த செவிலியர் சேவைக்காக வேலை செய்யவில்லை போல...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அன்பு என்றால் என்ன என்பதை புரியாத செவிலியர் என்றுதான் சொல்லவேண்டும்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

நோய் பற்றிய சரியான புரிதல் மக்கள் மத்தியில் மட்டுமல்ல மருத்துவத்துறையிலும் இல்லாதிருப்பதே இத்தகைய நடப்புகளுக்கு காரணம் ..