Tuesday, 15 April 2014

குட்டி சுட்டி

தன் அப்பா அம்மாவுடன் சும்மாவேனும் ஒட்டிக் கொண்டுவரும்  சுட்டிப்  பெண் .அப்பாவிற்கு மட்டுமே  நோயும் சிகிச்சையும் .காலை நான் வரும் போதே ஓடி வந்து எனக்கு குட் மார்னிங் சொல்வாள் .பெரிய மனுஷி போல அப்பாவின் உடல்நலன் குறித்து கேட்டும் கொள்வாள் .வயது என்னவோ ஆறு தான் .

"நீங்க வாக்கிங் மாதிரி ஏதாவது எக்ஸ்சர்சைஸ் பண்ணுவது நல்லது ."
"எனக்கு நேரம் கெடைக்க மாட்டேங்குது ."
"எங்கப்பா எவ்வளவு நேரம் வாக்கிங் போகணும் ஆன்ட்டி ?"
"அரைமணி நேரமாவது ...."
"டெய்லியா ?"
"ஆமா..."
"சரி, நான் பாத்துக்குறேன்."
இவகிட்ட சொல்லிட்டீங்கள்ல ,இனிமே விடவே மாட்டா ..."

"எங்கப்பா மாத்திரையே சரியா போடறதில ஆன்ட்டி ."
"சரியா தான் போடுறேன் .நீ சும்மா டாக்டர் கிட்ட எதையாவது சொல்லாத ."
"நீ எங்க சரியா போடுற ?அம்மா திருப்பி திருப்பி  சொன்னா தான் போடுற .
நீங்க கரெக்டா டைமுக்கு போடனும்ன்னு  சொல்லியிருக்கீங்கள்ல ,எங்கப்பா போடுறதே இல்ல . இன்னைக்கி கூட டாக்டர பாக்க வேண்டாம்,மாத்திரை மட்டும் வாங்கிட்டு போயிரலாம்னு தான் சொன்னாரு .எங்கம்மா தான் இல்ல டாக்டர பாத்துட்டு தான் போகணும்ன்னு சொன்னாங்க .அப்புறமா தான் வந்தாரு .
எப்படி ஒண்ணைய போட்டு விட்டேன் பாத்தியா :)"

 

Wednesday, 2 April 2014

விடியலில்

வயல்கள் சில்லிட்டிருக்கின்றன
பரவலான மழை நின்றிருக்கிறது
வசந்தத்தின் நிறங்கள் மொய்க்கின்றன
எல்லா பக்கங்களிலும்
நீலகுளம்  நிறைந்திருக்கிறது துள்ளும் மீன்களால்
பச்சை கொப்புகள் சரிகின்றன
பாடும் குருவிகளால்
அரிதாரம் அப்பிய கன்னங்களை நீரில் தோய்த்திருக்கின்றன
வயல் பூக்கள்
மலை புற்கள் வளைந்திருக்கின்றன இடுப்பளவு
மூங்கில் ஓடையோரம் கடைசி துண்டு மேகம்
காற்றடித்து சிதறுகிறது மெல்ல 




Clearing at Dawn

The fields are chill, the sparse rain has stopped;
The colours of Spring teem on every side.
With leaping fish the blue pond is full;
With singing thrushes the green boughs droop.
The flowers of the field have dabbled their powdered cheeks;
The mountain grasses are bent level at the waist.
By the bamboo stream the last fragment of cloud
Blown by the wind slowly scatters away.

Li Po
tr. Waley
Li Po

தனியே

பறவைகள் எல்லாம்  பறந்தும் போயின
ஓய்வாக மிதந்து போகிறது ஒற்றை மேகம்
ஒருவரை ஒருவர் காண நாங்கள் கசப்பதே இல்லை
மலையும்  நானும் மட்டும்


Alone Looking at the Mountain

All the birds have flown up and gone;
A lonely cloud floats leisurely by.
We never tire of looking at each other -
Only the mountain and I.

Li Po