Tuesday 15 April 2014

குட்டி சுட்டி

தன் அப்பா அம்மாவுடன் சும்மாவேனும் ஒட்டிக் கொண்டுவரும்  சுட்டிப்  பெண் .அப்பாவிற்கு மட்டுமே  நோயும் சிகிச்சையும் .காலை நான் வரும் போதே ஓடி வந்து எனக்கு குட் மார்னிங் சொல்வாள் .பெரிய மனுஷி போல அப்பாவின் உடல்நலன் குறித்து கேட்டும் கொள்வாள் .வயது என்னவோ ஆறு தான் .

"நீங்க வாக்கிங் மாதிரி ஏதாவது எக்ஸ்சர்சைஸ் பண்ணுவது நல்லது ."
"எனக்கு நேரம் கெடைக்க மாட்டேங்குது ."
"எங்கப்பா எவ்வளவு நேரம் வாக்கிங் போகணும் ஆன்ட்டி ?"
"அரைமணி நேரமாவது ...."
"டெய்லியா ?"
"ஆமா..."
"சரி, நான் பாத்துக்குறேன்."
இவகிட்ட சொல்லிட்டீங்கள்ல ,இனிமே விடவே மாட்டா ..."

"எங்கப்பா மாத்திரையே சரியா போடறதில ஆன்ட்டி ."
"சரியா தான் போடுறேன் .நீ சும்மா டாக்டர் கிட்ட எதையாவது சொல்லாத ."
"நீ எங்க சரியா போடுற ?அம்மா திருப்பி திருப்பி  சொன்னா தான் போடுற .
நீங்க கரெக்டா டைமுக்கு போடனும்ன்னு  சொல்லியிருக்கீங்கள்ல ,எங்கப்பா போடுறதே இல்ல . இன்னைக்கி கூட டாக்டர பாக்க வேண்டாம்,மாத்திரை மட்டும் வாங்கிட்டு போயிரலாம்னு தான் சொன்னாரு .எங்கம்மா தான் இல்ல டாக்டர பாத்துட்டு தான் போகணும்ன்னு சொன்னாங்க .அப்புறமா தான் வந்தாரு .
எப்படி ஒண்ணைய போட்டு விட்டேன் பாத்தியா :)"

 


5 comments:

Seeni said...

மகள் இன்னொரு தாய் ...

கீதமஞ்சரி said...

நெகிழவைக்கிறாள் சுட்டிப்பெண்! அவளுக்காகவாவது அந்தத் தந்தை தன் உடல்நலத்தில் அக்கறை காட்டவேண்டும்.

பூங்குழலி said...

ஆமாம் ..சீனி

பூங்குழலி said...

அவர் தந்தை அக்கறையோடு தான் இருக்கிறார் பல நேரங்களில் ..சிறு குழந்தையின் புரிதல் அது

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்