Thursday 18 September 2014

கரும்புக் கொள்ளை



முன்பு நான் பகிர்ந்த  மல்லாட்டையும் மருத்துவமனையும் என்ற பகிர்வின் கதாநாயகர் இவர்  ( http://மல்லாட்டையும் மருத்துவமனையும் ).
இன்று வந்திருந்தார் .இந்த முறை கரும்பு .

"கரும்பை  போட்டவன் எல்லாம் கஷ்டப்பட்டு கெடக்குறான் .கடலூர் பக்கத்துல மில்காரன்  ஆறாயிரம் கோடிக்கு மேல  விவசாயிக்கு பாக்கி வச்சிருக்கான் .கேட்டா சக்கர  வெல போகலன்னு சொல்றான் .
இப்ப  மார்க்கெட்டுல கெடைக்கறது எல்லாம் காரட் ,பீட்ரூட் சக்கர தான் .வெளிநாட்டுலேருந்து அதுதான் இங்க வருது . கரும்பிலிருந்து சக்கர எடுக்கணும்ன்னா கிலோக்கு இருநூத்து அறுபத்து அஞ்சு ரூபா ஆகுமாம் .இங்கிருந்து வெளிநாட்டுக்கு போயிட்டு இருந்ததாம் .இந்தம்மா வந்து அத நிறுத்திப்புடிச்சி .அந்த சக்கர  டன் கணக்குல இருக்கும் .கிரேன் வச்சு தான் தூக்க முடியும் .அது அப்படியே வச்சிருந்தா பழுப்பாயிரும் .அத மறுபடியும் கழுவி தான் சக்கரையாக்கணும் .அத  செஞ்சு அத வித்தா தான் காச குடுக்க முடியும்ன்ட்டான் ."

"ஆனா மில்காரன் கெட்டிக்காரத்தனமா பத்து பதினஞ்சு ஏக்கருல கரும்பு  போட்டவனுக்கெல்லாம் காச கொடுத்துட்டான் .அதே மாதிரி பாங்குல வாங்குன கடனையெல்லாம் கட்டிருக்கான் .அதனால எவனும் அவன கேக்க மாட்டேங்குறான் .சின்ன வெவசாயி தான் வழியில்லாம பொலம்பிட்டு கெடக்கான் .அதோட மில்லிலேயே கரெண்ட்  எடுக்கிறான் .அதுல அவன் தேவைக்கு போக மிச்சத்த கவர்ன்மென்ட்டுக்கு கொடுக்குறான் .அதுல அவங்க இவனுக்கு  நாப்பத்து எட்டு கோடி பாக்கியாம் .அத கொடுத்தா வெவசாயிக்கு காச கொடுத்திருவேங்கறான்.நாப்பத்து எட்டு எங்க ?ஆறாயிரம் கோடி எங்க ?"


"இந்தம்மா  ஊரையே கவர் பண்ணிட்டோம்ன்னு நெனைக்குது .அதனால கண்டுக்க மாட்டேங்குது .எல்லாம் இந்த எலவசம் பண்ற வேல .எலவசமே வாங்கக் கூடாதுமா .நம்ம பணத்தையே எடுத்து நம்மகிட்டேயே கொடுக்கிறாங்க .ஓட்டுக்கு பணம் வாங்கலைன்னாலும் வம்புக்கு வரானுங்க .எங்களுக்கு ஓட்டு போடாம போயிருவியான்னு ?"

"வெவசாயி  தான் ,பேப்பருல கூட படிச்சிருப்பீங்க ,வேப்பில கட்டி போராட்டம் ,பிச்சை எடுக்குற மாதிரி போராட்டம்ன்னு தெருவில நின்னு என்னென்னமோ போராட்டம் பண்ணி பாக்குறான் .ஒண்ணும் நடக்கல ."


4 comments:

மகேந்திரன் said...

அப்படி மிகவும் சிரமப்பட்டு வளர்த்த கரும்புகளை குறைந்த விலைக்கு
கொள்முதல் செய்து.. சர்க்கரை மற்றும் மொலாசஸ் எனும் திரவம் தயாரித்து
வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள்...
நம்ம ஊர் கரும்பு சர்க்கரை ஒரு கப்பல் கொடுத்தால்... 3 மடங்கு பீட்ரூட் சர்க்கரை
பண்டமாற்று முறையில் வாங்கி கொள்கிறார்கள்..
என்ன கொடுமை இது..
விவசாயி வயிற்றில் அடிக்க அடிக்க
அது நாட்டுக்கு பெரும் கேடு என்பது மட்டும் உண்மை...
அருமையான பகிர்வு சகோதரி...

பூங்குழலி said...

மிக்க நன்றி மகேந்திரன் .அவர் சொன்ன பல செய்திகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தன .இதில் அரசும் வியாபாரிகளும் திட்டமிட்டே விவசாயிகளை தலையெடுக்க முடியாத படி செய்கின்றன .

ezhil said...

இந்தச் செய்தியை கேள்விப்படவே சங்கடமாய் இருக்கிறது.. இவர்களும் இவ்வளவு தெளிவாக இருந்தும் ஓட்டு வங்கியை நிர்வகிக்கும் உரிமையை ஏன் எடுத்துக்கொள்ளவதில்லை

பூங்குழலி said...

வாழ்வாதாரமே இவர்களுக்கு சிக்கலாக இருக்கும் போது இவர்கள் வேறு எதை பற்றி சிந்திக்க முடியும் எழில் ?ஆனால் மிகவும் விவரமாக இருக்கிறார்கள் என்பது நிஜமே