கல்யாணத்த பத்தி இங்க ஒரு பெரிய பிரேமை இருக்கு . "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணணும்" வீட்ட கட்டி பாரு ,கல்யாணம் பண்ணி பாரு" , அப்படி இப்படின்னு .ஆனா நேற்றைய பதிவுக்கு அப்புறம் திடீர்ன்னு இங்க நெசத்துல என்ன காரணங்களுக்காக பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்கன்னு ஒரு நெனப்பு வந்தது .
என் மனசுல தோணின சில காரணங்கள் இங்க ..
1.பொண்ணுக்கு கல்யாண வயசு வந்திருச்சுன்னு பெத்தவங்களுக்கு தோண்றப்ப கல்யாணம் -இந்த வயசு சட்டப்படி ஒண்ணாவும் சமூகம் படிப்பு இப்படி சில விஷயங்கள் சார்ந்த ஒண்ணாவும் இடத்துக்கு ஏத்தப்படி இருக்கு .இந்தியாவுல இன்னமும் குழந்தை திருமணம் முழுமையா ஒழிக்கப்படவே இல்ல .
2.அம்மா அப்பாவுக்கு வயசு ஆகிறப்ப.குறிப்பா அப்பாவுக்கு வயசாகிருச்சுன்னா .கல்யாண செலவு ,அதுக்கு பின்னால செய்ய வேண்டிய சீர் செலவு அதுக்கான source தேவை இதுக்கு காரணமா இருக்கு .
3.அம்மாவோ அப்பாவோ இதுவும் அப்பா இல்லாத பொண்ணுக்கு ,சில நெருங்கின சொந்தக்காரங்க அவங்களுக்கு தோதான நேரத்துல அந்நேரத்துல அகப்பட்ட மாப்பிள்ளையை பிடிச்சு ஒரு கல்யாணம் .
4.தேடி அலையாம தானவே நல்ல மாப்பிள்ளை (இது நல்ல படிப்பு ,நல்ல வேலை +வருமானம் ,நல்ல சொத்து வசதி ,நல்ல அழகு /சிவப்பு நிறம்ன்னு எதுவாக வேணும்னா இருக்கலாம் ) இந்த பொண்ண கட்டிக் கொடுங்கன்னு வலிய வந்து கேக்குறப்ப .
5.பொண்ணு மேல படிக்க மாட்டேன்னு மக்கர் பண்ணினா -அடுத்தது கல்யாணம் தான்
6.சில பொண்ணுங்க ஒரு டிகிரி முடிச்சிட்டு மேல படிக்கிறேன்னு சொல்றப்ப .இதுல ரெண்டு கேட்டகிரி இருக்கு .ஒண்ணு மேல படிக்கிறேன்னு சொல்றப்ப அதுக்கு பொருத்தமா மாப்பிள்ளை கிடைக்காதோன்னு ஒரு கல்யாணம் .இன்னொன்னு வெளிநாட்டுல போய் படிக்கப் போறேன்னு சொல்ற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு மாப்பிள்ளையோட போன்னு அட்வைஸோடா அநேகமா வெளிநாட்டுல வேல பாக்குற இல்ல வேல பாக்குற வாய்ப்பு இருக்குற பையன பாத்து கல்யாணம் .
7. பொண்ணு யாரையாவது லவ் பண்ணிட்டா இல்ல லவ் பண்ணுமோன்னு சந்தேகம் வந்துட்டா அடுத்து வர ஜாதிக்கார பையன் ஓகே தான் .
8. பொண்ண யாராவது நமக்கு பிடிக்காத பையன் லவ் பண்ணிட்டா இல்ல லவ் பண்ண சொல்லி தொந்தரவு பண்ணா -சட்டுன்னு ஒரு கல்யாணம் .
9. பிடிச்ச பொண்ண ஆளு வச்சு தூக்கிட்டு போய் கட்டாய கல்யாணம் .
10.பொண்ணோட அக்கா கல்யாணத்தன்னைக்கு காதலனோடு எஸ்கேப் ஆயிட்டா ,நிச்சயம் பண்ணின மாப்பிள்ளைக்கு இழப்பீடா அடுத்த பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையோட கல்யாணம் .
11.அப்புறம் எப்பவாவது சில அல்ப சொல்ப இடங்கள்ல ஒரு பொண்ணும் பையனும் இஷ்டப்பட்டு ஒண்ணா வாழ விருப்பப்பட்டா ...வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா .