ஒரு சனிக்கிழமை .நிறைய பேஷண்ட்ஸ் .பாத்துக்கிட்டே இருக்கிறப்ப ஒரு கணவன் மனைவி .இவங்களுக்கு ஒரு மகனும் மகளும் .ரெண்டு பெரும் படிப்பெல்லாம் முடிஞ்சி வேல பாக்குறாங்க .
"பிள்ளைங்க கிட்ட எங்க ரெண்டு பேருக்கும் எச் ஐவி இருக்குன்னு சொல்லிட்டோம் (சொல்ல சொல்லி கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருக்கேன் ).இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு பாக்குறோம் .ஒத்துக்க மாட்டேங்குறா .நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க ."
நான் "நிறைய பேஷண்ட்ஸ் இருக்காங்களே ."
"பரவாயில்ல,நாங்க வெயிட் பண்றோம் .எல்லா பேஷண்ட்டும் பாத்து முடிச்சிட்டு பேசுங்க "
பொண்ணு அழகா ரொம்ப துடிப்பா இருந்தா .
என்ன சொல்றாரு உங்கப்பா ?
"ஒண்ணுமில்ல ஆண்ட்டி .கல்யாணம் பண்ண சொல்லி எல்லாரையும் அட்வைஸ் பண்ண சொல்றாங்க .நா பேசாம கல்யாணமே பண்ணிக்கிறேன் ."
ஒனக்கு இஷ்டமில்லையா ?
"அம்மா அப்பா ஹெல்த் எப்படி இருக்கு ?"
நல்லா இருக்கே .
"அப்புறம் ஏன் அத சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு கம்பெல் பண்றாங்க ?நாங்க இருக்கும் போதே பண்ணிக்கோன்னு ?"
எப்ப கல்யாணம் பண்ணலாம்ன்னு நீ நினைக்கிற ?
"நல்ல பையனா இருந்தா ,எனக்கு ஓகே தான் .எனக்கு பையன பிடிக்கணும் ."
இந்த பையன பிடிக்கலையா ?
"ஆமா ஆன்ட்டி .பிடிக்கல .அப்பா மத்த எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றாரு .பிளாக்மெயில் வேற .நா கல்யாணமே பண்ணிக்கிறேன் .பரவாயில்ல .ஆனா இந்த பையன எனக்கு பாத்தாலே பிடிக்கல ."
இப்ப அம்மா அப்பாவ வர சொன்னோம் .
"ஒத்துக்கிட்டாளா ?"(நம்ம திறமைல அப்படி ஒரு நம்பிக்கை )
கல்யாணத்துக்கு ஓகே தான் .இந்த பையனுக்கு ஓகே இல்லையாம் .
"ஆமா ,பையன் நல்லா இல்ல .எங்களுக்கே பிடிக்கல .ஆனா மத்த எல்லாம் இருக்கு .அப்புறம் எங்களுக்கு ஒடம்பு நல்லாருக்கும் போதே செய்யணும் .சர்வீஸ் வேற இன்னும் நாலு வருஷம் தான் இருக்கு .அவளா ஏதாவது பையன இஷ்டப்பட்டாலும் பரவாயில்ல ."
உங்க ரெண்டு பேர் ஹெல்த் நல்லா இருக்கு .அப்புறம் யாரோட ஆயுசையும் யாராலயும் கணிக்க முடியாது .அத காரணம் கட்டி அந்த பொண்ணுக்கு பிடிக்காத பையன ,இதுல உங்களுக்கும் பையன பிடிக்கல, கல்யாணம் பண்ணி வைக்கிறத விட பெரிய முட்டாள் தனம் வேற எதுவும் இல்ல .
எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த அத பொண்ணு சொன்னா ,"ஆண்ட்டி ,நா இப்பதான் கொஞ்ச மாசமா வேலைக்கு போறேன்.இப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது தெரியும் .இவங்க இத சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க .இதே காரணத்துக்காக நா என் கேரியர்ல நல்லா வரணும் .நாளைக்கு அம்மா அப்பாக்கு ஏதாவது ஆஸ்பத்திரி செலவுக்கு தேவைப்பட்டா செலவழிக்க பணம் சேத்து வைக்கணும்ன்னு நினைக்கிறேன் .கொஞ்ச நாள் போகட்டும் .இவங்க பாக்குற பையன் எனக்கு பிடிச்சிருந்தா இல்ல எனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் ."

4 comments:
மாப்பிள்ளை பிடிக்கலை. வேற மாப்பிள்ளை பாருங்கனு சொன்னால்..இன்னும் ஒரு 10 பேரை கொண்டு வந்து நிறுத்திடுவாங்க என்பதால் அதையும் தெளிவு படுத்தாமல் இருக்கிறாள் மகள்னு தோனுது.
ஏகப்பட்ட எச் ஐ வி பாஸிடிவ் கேஸ்களை சாதாரணமாக பார்க்கும்போதுதான் இந்தியா ரொம்ப முன்னெறிடுச்சுனு தோனுது.
மகளுக்கு தங்கள் உடம்பில் எச் எஐ வி வைரஸ் வாழ்ந்துகொண்டு இருக்குனு சொல்றதில் ஒரே ஒரு பிரயோஜனம்தான். மகளாவது அம்மா அப்பா போல் பொறுப்பில்லாமல் இருக்க மாட்டாள். கவனமாக இருப்பாள்.
வரப்போற மாப்பிள்ளையிடம் எச் ஐ வி டெஸ்ட் பார்க்க சொல்லுவாங்கனு நினைக்கிறேன். ஏன் ன்னு கேட்டால், எங்களுக்கு எச் ஐ வி இருக்குனு சொல்லிடுவாங்களா? There are lots of complications can arise.. I think
I think, she is better off choosing someone who loves her especially in this particular case. If the parents are wise (after all this HIV +ve etc they should have been by now), they will let her choose a guy who loves her. Arranged marriage seems like a "bad idea" for this particular situation! :)
இதுல விஷயம் என்னன்னா அல்ப காரணங்களுக்காக திருமணம்னு எதையோ ஒண்ண அவசரமா பண்ண நினைக்கிற இந்த எண்ணம் எவ்வளவு முட்டாள்தனம் !
எனக்கு என்ன புரியலைனா, இன்றை தமிழ்நாட்டில் டேட்டிங் தப்பில்லை, ப்ரி மாரிட்டல் செக்ஸ் தப்பில்லை, டாஸ் மாக் தப்பில்லை என்றெல்லாம் சொல்லி "முன்னேறிவிட்டது நம் நாடு" "நாங்களும்தான்" என்பதுபோல்தான் பேசுறாங்க.
ஆனால் கல்யாணம் என்று வரும்போது, டேட்டிங், ப்ரிமாரிட்டல் செக்ஸ் வைத்துக்கொண்ட பார்ட்னரை முதன்மையான ஆளாக வைக்காமல், "சாதி, வசதி" அடிப்படையில் இன்னொரு ஆணையோ பெண்ணையோ பெற்றோர்கள் மட்டுமன்றி இந்த அரைவேக்காடுகளும் திருமணம் செய்யப் பார்க்கிறார்கள். இது அரைக்கிணறு தாண்டுவதுபோல் தோனுது.
ஒண்ணு, டேட்டிங் ப்ரி மாரிட்டல் செக்ஸ் எல்லாம் வேணாம், என் சாதி மதத்திலேயே என் படிப்பு அழகுக்குத் தகுதியான ஒரு ஆணை பெண்ணை அரேஞிட் மேரேஜ் பண்ணி மணந்து கொள்கிறேன்னு போகலாம்.
அல்லது டேட்டிங், ப்ரி மரிட்டல் செக்ஸ் வைத்துக் கொண்ட பார்ட்னரை, அவன்(ள்) என்ன சாதியா இருந்தாலும் தகுதி என்னவா இருந்தாலும், காசு இருக்கோ இல்லையோ, திருமணம் செய்துகொள்ளணும். காரணம்? எங்களுக்குள் நல்ல புரிதலிருக்கு, கெமிஸ்ட்ரி நல்லா யிருக்கு எட்ஸெட்ரா
இதை ரெண்டையும் மிக்ஸ் பண்ணிய இன்றைய தமிழ் கலாச்சாரம் (அதாவது டேட்டிங், ப்ரி மாரிட்டல் செக்ஸ் வைத்துக்கொள்ள உள்ள் பார்ட்னெர், ஏழையா இருக்கலாம்,என்ன சாதி அல்லது மதமாவும் இருக்கலாம்.. ஆனால் கல்யாணம்னு வந்துவிட்டால், சாதி பார்ப்பேன், தகுதி பார்ப்பேன், சம்பளமென்னனு பார்ப்பேன், அதான் எனக்கு முக்கியம் என்கிற "இன்றை கல்ச்சர்") கேவலமான ஒண்ணுனு சொன்னால் எல்லாருக்கும் கோபம் வேற வருது.
-------------------
ஆமா, உங்க தலைப்பு..அது இருமனம் தானே? நீங்க என்ன இருமணம்னு சொல்றீங்க? (இருமனம் கொண்ட திருமண வாழ்வில்னு ஒரு பாட்டு கேட்டு இருக்கேன்..)எழுத்துப்பிழையா இல்லைனா எனக்குப் புரியாத தமிழானு எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை!
Post a Comment