டெங்கி தமிழ்நாட்டில பரவல்ல இருந்த நேரம்.அரசு பெரிய அளவுல நிலவேம்பு குடிநீரை பரபரப்பா கொடுத்திட்டிருந்தாங்க .ஒரு பிரபல தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க .அவங்க வழக்கமான பேனல் தான் .அவங்க அரசியல் விமர்சகர் /டாக்டர் ,பிரபல சித்த மருத்துவர் ,அதிமுக சார்பில ஒரு டாக்டர் ,நான் .
உள்ள போனதுமே நெறியாளரும் சித்த மருத்துவரும் ,"நாம இந்த ஆங்கில மருத்துவத்த அடிச்சி பேசிறனும்"னு பேசிக்கிட்டாங்க .நிகழ்ச்சி வழக்கமான வகையில ,ஆனா பேசுறதுக்கே சொற்ப நேரமே கொடுத்தாங்க .எப்ப பேசினாலும் சித்த மருத்துவர் இடைமறிச்சி பேசிக்கிட்டே இருந்தாரு .நெறியாளரும் தடுக்கல .
அப்ப டிவிட்டர்ல யாருக்கும் நான் தான் அந்த நிகழ்ச்சியில பங்கேற்ற டாக்டர்ன்னு தெரியாது .இங்கே பிரபல ட்வீட்டர்கள் பலரும் நிலவேம்பு குடிநீருக்கு ஆதரவா ஆக்ரோஷமா களமாடிட்டு இருந்தாங்க .அதிலேயும் ஒருத்தர் அல்லோபதி டாக்டர்களுக்கு அவங்க களமோ என்னவோ சொன்னாரு பறிபோயிடும்ங்கற பயம் நல்லாவே தெரிஞ்சதுனு சொன்னாரு .அப்புறம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாளில்லை டைப் விவாதங்கள் வேற .நானும் ரெண்டு மூணு ட்வீட் போட்டுட்டு கடந்து போய்ட்டேன் .
போன வருஷம் கொரோனா வந்தப்ப இப்படித்தான் கபசுர குடிநீர் அறிமுகம் ஆச்சு .என்ன டோஸ் எத்தனை நாளைக்கு குடிக்கனும் எத்தனை நேரம் குடிக்கனும்ங்கிற எந்த தெளிவும் இல்ல .அவங்கவங்க அவங்கவங்க இஷ்டம் போல பயன்படுத்திட்டிருந்தாங்க/ இருக்காங்க . இப்ப கபசுர குடிநீர் ,கிராம்பு ,இஞ்சி ,மஞ்சள் ,வேப்பிலை அப்புறம் ஒரு நாள்ல்ல கணக்கில்லாத முறை ஆவி பிடிக்கறதுனு நோய் தீவிரமானதுக்கு அப்புறம் மருத்துவமனைக்கு வரவங்களுக்கு என்ன சொல்றது ?
மக்களை குறை சொல்லி பலனில்ல .இதுக்கு பின்னால ஊடகங்களும் இருக்கு .சித்த மருத்துவர்களும் எந்த ஒரு அறிவியல் வட்டத்துக்குள்ள வர மறுத்து ,ஒரு ஒளி வட்டத்தோடயே வலம் வராங்க .நாங்க இதுக்கு தரவு இல்ல ,இப்ப புது ஆய்வு இது வேலைப்பாக்காதுனு தெளிவா உள்ளத உள்ளபடியே சொல்றோம் ,ஆனா அதுல எல்லாருக்கும் ஆயிரம் சந்தேகம் வருது .
இதுக்கு எல்லா நிலையிலேயும் science சார்ந்த புரிதல கொண்டு வரணும் .ஒரு இயந்திரம் பழுதானா பெரும்பாலும் பணமோ நேரமோ தான் இழப்பாகும் .ஆனா மருத்துவம் அப்படியில்ல .அதனால தான் மருத்துவர்கள் இத்தனை மதிக்கப்படுறாங்க .அதனாலேயே அவங்களுக்கும் மக்கள் நலனிலேயும் அவங்க சரியான சிகிச்சையை செஞ்சுக்க வழிகாட்டுறதிலேயும் பெரிய பொறுப்பு இருக்கு .
2 comments:
ஆனாலும் அலோபதி தனியார் மருத்துவமனைகளில் போடுகிற பீஸ் வயித்தை ரொம்பத்தான் கலக்குது...அதுக்கு சயன்ஸ்படி ஒரு கணக்கிருந்தால் நல்லது...
இது ஒரு பொதுவான கூற்று -ஆனால் பரவலாக பேசப்படாதது பல சித்த வைத்தியங்கள் இதைவிட பல மடங்கு விலை உயர்ந்தவை
Post a Comment