சென்னையின் இன்றைய முக்கிய அடையாளங்களின் ஒன்றான தியாகராய நகர்
சரவணா ஸ்டோர்ஸில் இன்று தீ விபத்து .ஊழியர்களுக்காக சமையல் நடந்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இந்த விபத்து நேர்ந்ததாக
சொல்லப்படுகிறது .உயிர் சேதம் பொருள் சேதம் பற்றி முடிவான செய்திகள் ஏதும் இல்லை .
ரங்கநாதன் தெரு ,சென்னையின் முக்கிய கடைவீதிகளில் முதன்மையானது .குறுகலான இந்த சந்தில் எப்போதும் பல்லாயிரக் கணக்கான
மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் .இதில் தீ விபத்தோ ,இல்லை
ஒரு நில அதிர்வோ ஏற்பட்டால் சேதங்கள் அதிகம் என்பது மட்டுமல்லாமல்
மீட்பு பணிகளிலும் அதிக சிரமம் என்று பல நேரங்களில் அச்சம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது .புது மேம்பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப் பட்ட போது கூட
அதில் தீயணைப்பு வண்டிகள் நுழைவது கடினம் எனக் கூறப்பட்டது .
இந்த எச்சரிக்கைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் இன்று தீ விபத்து நடந்தே விட்டது .அதிகாலை நேரம் என்பதால் சேதம் குறைவே .அலுவல் நேரங்களிலோ
மாலையிலோ இந்த விபத்து நேர்ந்திருந்தால் எண்ணிப் பார்க்க முடியாத கோரம்
நடந்து முடிந்திருக்கும் .
சரி நாம் எண்ண செய்ய முடியும் .அடடா ,நல்ல வேளை,அப்பவே சொன்னாங்க என்று வழக்கம் போல் அங்கலாய்த்து விட்டு மறுபடியும் தீபாவளி துணிகள் வாங்க கிளம்ப வேண்டியது தான் .
Monday, 1 September 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இங்கு நான் ஒவ்வொரு முறை முஸ்தாபா கடைதொகுதிக்கு போகும் போது நினைத்துக்கொள்வேன்,ஒரே ஒரு தீவிபத்து போகும் இங்கு பலரை ஒட்டுமொத்தமாக மேலே அனுப்ப என்று,ஏனென்றால் கடைக்குள் நடைபாதை அகலம் மிகவும் குறைவு.
நடக்காமல் இருக்கனும்.
Post a Comment