அறியாதவரையும் ஒரு சேர கட்டிப் போட்ட வயலின் இசை மேதை திரு .குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் காலமானார் .
வயலின் முதல் முதலில் பேசியது இவர் மீட்டிய போது தான் .
பல முறை இவர் நிகழ்ச்சியைப் பார்த்த போதெல்லாம் இவர் வயலினில் பேச்சுக் குரல் கேட்பது போன்றே தோன்றும் எனக்கு .
நெற்றியை மறைக்கும் திருநீறு ,அதில் காசகல குங்குமம் ,கழுத்தை மறைக்கும் நகைகள் என்று தனக்கென்று உடையிலும் தனி அடையாளம் கொண்டிருந்தவர் .
திரை இசைப் பாடல்களை பலரின் எதிர்ப்புகளுக்கு இடையே கர்நாடக சங்கீத மேடைகளில்அரங்கேற்றியவர் .கோமாளித்தனங்கள் செய்கிறார்,சங்கீத மேடையை அவமதிக்கிறார்
என்ற ஏசல்களை மீறி ரசிகர்களுக்காகவே வாசித்தவர் .இவர் அடிக்கடி கூறுவாராம் "நான் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்று ".
தெய்வம் என்ற திரைப்படத்திற்கு இவர் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்றவை .
இசை உலகம் ,இசையின் எல்லா பரிமாணங்களையும் ஆராயத் துணிந்த ஒரு மாமேதையை இழந்திருக்கிறது .
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் .
1 comment:
வயலின் வித்வான் குன்னக்குடி வாசிச்சா, கேட்க கூட வேணாம்... வாசிக்கும் போது அவரோட அந்த சிரிப்பு, வாசிப்பில் மாறும் சில சில முகபாவம் இருக்கே... இன்னமும் மறக்க முடியாதவை அவரோட இசை போல!
Post a Comment