Friday, 21 November 2008

மங்கையராக பிறந்திடவே ...

"மங்கையராக பிறந்திடவே மாதவம் செய்ய வேண்டும்"


இது நாம் கேட்டுப் பழகிப் போன கூற்று தான் .மாதவம் செய்யவில்லை என்றால் இங்கு மங்கையராய் பிறப்பதும் வாழ்வதும் கடினம்தான் .
பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைவது பற்றியும் பெண் சிசுக் கொலை பற்றியும் எழுதி களைத்தாயிற்று .

இன்று திண்டுக்கல்லில் ஒரு தந்தை தனக்கு மூன்றாவதாகவும் பெண் மகவு பிறந்ததற்காக தற்கொலை செய்துக் கொண்டார் .

ஆண் மகன் வேண்டும் என்ற கட்டாயம் எதற்காக ?எவருக்காக ?


முதல் இரண்டு குழந்தைகளையுமே வளர்ப்பதில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும் போது இன்னொரு குழந்தையை அது ஆணாகவே பிறந்திருந்தாலும் பெற வேண்டிய அவசியம் என்ன ?

இன்றும் ஆண் பிள்ளை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ன ?

எந்த பிள்ளையும் காக்கலாம் ,காப்பாற்றாமல் போகலாம் என்ற உண்மை இன்னுமா சிலரின் வீடு வந்து சேரவில்லை ?

குலம் தழைக்க ஆண் பிள்ளை என்று சொல்லிக் கொள்ள நாம் என்ன இன்னும் முடியரசர்கள் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?


முன்பு வரிசையாக பெண்களை பெற்று விட்டு "போதும் பொண்ணு ","மங்களம்"
என்றெல்லாம் பெயரிட்டு அந்த வரிசையை முறியடிக்கப் பார்த்தவர்களை பார்த்திருக்கிறோம் .மாறுபாடாக இன்று ஒரு தந்தை தன்னை தானே முடித்துக் கொண்டு இதை செய்திருக்கிறார் .

பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் கை விட்டதோடு அல்லாமல் பிறந்த குழந்தைக்கு தந்தையை விழுங்கியவள் என்ற பாரத்தையும் ஏற்றிவிட்டு .....


http://thatstamil.oneindia.in/news/2008/11/21/tn-father-commits-suicide-after-wife-gave-birth-3rd-famale-c.html


2 comments:

Unknown said...

பூங்குழலி,

//மங்கையராக பிறந்திடவே // முதலில் பார்த்து வழக்கமான அசட்டு கட்டுரை/கவிதை/கதை எழுதும் (சில) பெண் வலைத்தளமோ என்று நினைத்தேன் .

பிறகு உள்ளே போய் பார்த்தேன். கதை,கவிதை நன்றாக இருந்தது. பாட்டி பற்றி ஒரு கி.ரா.ஸ்டைலில் எழுத்து . கன கச்சிதமாக முடியும் அனுபவ கட்டுரைகள் . எல்லாமே நன்றாக இருந்தது.


//விளையாட்டு பொம்மைகள்// நான் எழுதிய ஒரு கவிதை ஞ்சபகம் வந்தது .

மேல் கிழ் பக்கத்து எதிர்
வீட்டு குழந்தைகள்
விளையாட
என் வீட்டில்
இறைந்து கிடக்கும்
பொம்மைகள்

என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.
ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்

பூங்குழலி said...

மிக்க நன்றி ரவிஷங்கர்