Monday 24 November 2008

குறை ஒன்றும் இல்லை




குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
மூதறிஞர் ராஜாஜி


2 comments:

ஆர்.வேணுகோபாலன் said...

கடவுள் நம்பிக்கையோ, இசை மீது நாட்டமோ அல்லது எம்.எஸ்.ஏற்படுத்திய தாக்கமோ, இந்தப் பாடலை மனம் தொய்ந்து விடும்போதெல்லாம் கேட்டுத் தூக்கி நிறுத்த முயல்கிற பழக்கம் எனக்குண்டு. இதை இணையத்துக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. இங்கேயும் சில நேரங்களில் இந்த இசைமருந்து தேவைப்படலாம்.

தமிழன் வேணு

geevanathy said...

//இசைமருந்து //வேணு

முற்றிலும் உண்மை

என் அம்மாக்கு நன்றாகப் பிடித்த பாடல்
நன்றி இணையத்துக்கு கொண்டு வந்ததற்கு