Wednesday 19 August 2009

கதை

தினம் ராத்திரி என் மகனுக்கு கதை சொல்லனும்.அதவும் புதுப்புதுக் கதையா வேற சொல்லணும் .இதுக்காக நானும் நிறைய கதை படிக்க வேற வேண்டியிருக்கு .இப்ப அது இல்ல விஷயம் .இப்ப ரெண்டு நாள் முன்னால கதைன்னு ஆரம்பிச்சான் .நானும் சரி யோசிச்சு சொல்றேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் ,புதுசா எதுவுமே ஞாபகம் வரல .ஹரிச்சந்திரன் கதையை சொல்லி ரொம்ப நாளாயிடுச்சி.சரி அதையே சொல்லிருவோம்ன்னு சொல்லியாச்சு .


கதைய இழுத்து இழுத்து சொல்லி முடிச்சேன் (ஏன்னா அப்புறம் சின்ன கதைன்னு சண்டை போடுவான் இல்லைனா இன்னொரு கதை சொல்லணும் ).சொல்லி முடிச்சிட்டு ,இப்ப இந்த கதையிலிருந்து ஒனக்கு என்ன தெரியுதுன்னு கேட்டேன் .
நான் சின்ன பிள்ளையா இருக்கப்ப ,"எந்த கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லக் கூடாதுங்கறது "தான் இந்த கதையோட முதல் நீதி.இவன் சொன்னான் ,"நல்லவங்கள டிரிக் (trick) பண்ணக் கூடாது ."


2 comments:

Jerry Eshananda said...

பூங்குழலி,இன்று தான் உங்கள் வலைபூவுக்கு வந்துள்ளேன். நன்றாக மணக்கிறது.
தொடருங்கள்...."ஜெரி ஈசானந்தா"-மதுரை

பூங்குழலி said...

மிக்க நன்றி ஜெரி ஈசானந்தா