Saturday 1 August 2009

அம்மன் கொடை

சாமியாட்டம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது .கோவிலுக்குள் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தது .இது தவிரவும் இன்னொரு பக்கம் தாயார் கூத்து நடக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது .

விமர்சையான கொடையாகவே இருந்தது தெரிந்தது .சுத்து வட்டாரங்களில் இந்த கொடை மிக பிரபலமாக இருப்பது ஏன் என்றும் புரிந்தது .அன்றிரவும் கரகாட்டம் இருந்தது .ஆடியது இன்னொரு குழுவினர் .இவர்களுக்கான ஏற்பாடை செய்து கொண்டிருந்தவர்கள் குழுவினரை தேடிக் கொண்டிருந்திருப்பார்கள் போலும் .
பல தடவை மைக்கில் கூப்பிட்டபடியே இருந்தனர் ."கரகாட்ட கோஷ்டி எங்கிருந்தாலும் வரவும் ,கரகாட்டம் ஆடுபவர்கள் எங்கிருந்தாலும் உடனே வரவும் ,கரகாட்டம் ஆடுபவர்களை கமிட்டி மெம்பர்கள் கூப்பிடுகிறார்கள் உடனே வரவும் ,கரகாட்ட குழுவினரை புக் செய்த .......அழைக்கிறார் உடனே வரவும் ",என்று அழைத்தப்படியே இருந்தனர் வெகு நேரம் .


1 comment:

துபாய் ராஜா said...

நம்ம ஊர்பக்கம் கோயில் கொடை முடியறவரை மைக் செட்டு யாரையாவது வரவும் வரவும்னு கூப்பிட்டு அல்றிக்கிட்டு தான் இருக்கும்.