Monday, 21 September 2009

பிள்ளை மனம்

ஒரு பதிமூன்று வயது பெண் குழந்தை .கருவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டது .போன வாரம் தந்தையுடன் சிகிச்சைக்காக வந்திருந்தாள் .

தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாளா என்று கேட்ட போது ,சரியாகவே சாப்பிடுவதாக சொன்னார் தந்தை.பின்னர் ,இந்த நோய் இருப்பது உங்கள் மகளுக்கு தெரியுமா என்று ஜாடையாக கேட்ட போது ,"இன்னமும் தெரியாது "என்று அந்த தந்தை சொன்னார் .உடனே குறுக்கிட்ட அந்த பெண் ,"எனக்கு எச்.ஐ.வி இருப்பது எனக்கு தெரியும் "என்றாள்.

எப்போது தெரியும் என்பதை விசாரித்த போது ,"ஒரு வருடம் முன்னதாகவே தெரியும் "என்றும் சொன்னாள் ."உங்கள் மகளுக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியாதா ?"என்று தந்தையைக் கேட்ட போது ,"தெரியாது "என்றே சொன்னார் அவர் .இதைக் கேட்டதும் அந்த பெண் கேவிக் கேவி அழத் தொடங்கினாள் .


தனியே அழைத்துச் சென்று ஆறுதல் சொல்லி கேட்ட போது ,"எனக்கு போன வருஷம் இங்க ஒரு தடவ வந்து போன பிறகு நான் வெளியே கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.எனக்கும் எச்.ஐ.வி இருக்கதால தான் என்னைய இங்க மட்டும் கூட்டிட்டு வராங்கன்னு தெரிஞ்சுது .ரொம்ப அழுக அழுகையா வந்தது .இப்போ பரவாயில்ல .ஆனா எங்கப்பா இன்னும் எனக்கு தெரியாதுன்னு நெனைச்சிகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சவுடனே அழுக வந்திருச்சி ."
எத்தனை வேதனை இந்த சிறு வயதில் ...


2 comments:

maruthamooran said...

வாழ்க்கையின் சில தருணங்களும், சோகங்களும் மீள நினைக்கக் கூடாதவை. அந்தச் சிறுமியின் வாழ்வில் விளையாடியது விதியா அல்லது மற்றொரு மனிதத்தின் சதியா என்பதே ஜீரணிக்க முடியாத வலி. சிறுமியின் மன உறுதிக்கு வழிசெய்யுங்கள். அந்த சிறுமியின் எதிர்காலத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களையுத் தெரிவியுங்கள்.

பூங்குழலி said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி மருதமூரான்