Monday 1 February 2010

தாலி

சில நாட்களுக்கு முன்னால் நடந்தது . காலையிலேயே மருத்துவமனை அல்லோகலப்பட்டது . வெளியூரிலிருந்து வரும் பலர் காலையிலேயே வந்து இங்கேயே குளித்துவிட்டு பரிசோதனைக்கு வருவது வழக்கம் .இவ்வாறு குளித்த பெண் ஒருவர் தன் தாலி செயினைக் குழாயின் மேல் மாட்டி வைத்து விட்டு குளித்து இருக்கிறார் .மறந்து விட்டு வந்தவர் திரும்ப சென்ற போது செயின் இல்லை .மூணு பவுன் என்று சொல்லி சத்தமாக அழுதுக் கொண்டிருந்தார் .ஆளாளுக்கு அவரவர் கருத்தை வழக்கம் போல் ,சொல்லிக் கொண்டிருந்தார்கள் ."தாலியைக் கழற்றலாமா ?"மூணு பவுனு !தங்கம் விக்கிற விலையில போனா கிடைக்குமா ?"தங்கம் கெடைச்சா சும்மா விடுவாங்களா ?"ஆஸ்பத்திரியில வந்து கழட்டிட்டு குளிக்கனுமா ?என்று தங்கம் சம்பந்தமாகவும் தாலி சம்பந்தமாகவும் பல கருத்துகள் .அந்தப் பெண்ணோ அழுதுக் கொண்டே இருந்தார் .

இந்த அமளிகள் ஓய்ந்து ஒரு மணி நேரம் சென்ற பின் மீண்டும் சத்தம் என் அறைக்கு வெளியே .இருபெண்களின் குரல்கள் மட்டும் ஓங்கி கேட்டது .நடந்தது இது தான் .இந்தப் பெண் குளித்து விட்டு வந்த பின் இன்னொரு பெண் குளிக்க சென்றிருக்கிறார் .செயினைப் பார்த்த இவர் அதை எடுத்து வந்துவிட்டிருக்கிறார் .இப்போது அதை அந்த பெண்ணிடம் திரும்ப தந்துவிட்டார் ,"தாலியை கழட்டின நீயெல்லாம் பொம்பளையா " என்பது போன்ற
அறிவுரைகளை இணைத்து .அமைதியாய் அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தார் தாலியை தொலைத்தவர் .

எங்களுக்கு எஞ்சியது இரண்டு கேள்விகள் தான் ,அந்தப் பெண் நகையை ஒரு பொது இடத்தில் கழற்றி வைத்தது விட்டு அஜாக்கிரதையாய் இருந்தது பெரிய தவறு .ஆனால் ,எடுத்தவர் எதற்காக அதை எடுத்தார் , எதற்காக திரும்ப தந்தார் ?


6 comments:

சந்தனமுல்லை said...

:-)கொடுப்பதற்காக எடுத்தாரோ?!!

அண்ணாமலையான் said...

திரும்ப கிடைச்ச வரை சந்தோஷம் தான்.. இதான் தாலி பாக்கியமோ?

பூங்குழலி said...

கொடுப்பதற்காக எடுத்தாரோ
:))

இந்திராகிசரவணன் wrote...
எடுக்காமல் இருப்பதை விட, எடுத்துவிட்டு பின் கொடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்...அறிவுரையின் பேரில் தன் குற்றத்தைமறைக்க முயன்றாலும் அவளே வீரமானவள்...



அந்தப் பெண்ணின் அழுகையைப் பார்த்து திரும்ப தந்திருக்கலாம் இல்லை தாலியை கழட்டியதற்கு கஷ்டப்படட்டும் என்று நினைத்து அழ விட்டு தந்திருக்கலாம் ?எப்படி
ஆனாலும் திரும்ப தர அதிக துணிவு வேண்டும் என்பது உண்மைதான் .

துளசி கோபால் said...

அதுக்குத்தான் பாத்ரூமை விட்டு வெளியே வருமுன் எதாவது விட்டுப்போச்சான்னு பார்க்கணும்.

ஹொட்டேலில் தங்கிட்டு அறையைக் காலி செய்யும்போது ஒருமுறைக்கு ரெண்டுமுறையா கழட்டிவச்ச நகை, விட்டுப்போன பொருள்ன்னு பார்த்துக்கிட்டால் நல்லது.

தாலியைக் கழட்டுனா.....பொம்பளை இல்லையா? அச்சச்சோ...........

பூங்குழலி said...

தாலியைக் கழட்டுனா.....பொம்பளை இல்லையா? அச்சச்சோ...........


இதே அச்சச்சோ தான் இங்கேயும்

sathishsangkavi.blogspot.com said...

//எடுத்தவர் எதற்காக அதை எடுத்தார் , எதற்காக திரும்ப தந்தார் ? //

அவர் எடுத்ததை விட... திருப்பிக் கொடுப்பதற்கு ஒரு மனசு வேணும்...
நாம் அதைப்பாராட்டலாம்....