டீ போடவென
ஒரு தனித்திறன் தேவையாயிருக்கிறது
லேசாக இல்லாமலும்
அடர்வாக இல்லாமலும்
டீ போடவென ஒரு திறன் தேவைதான்
தித்திப்பும் மெல்லிய கசப்பும்
உதட்டில் பரவி
நாவில் பூச
பருகுவோர் காதல் கொள்ளும்
டீயின் தனி சுவை
ஆக்குவது ஒரு திறனே தான்
ஏதோ ஒரு
லாகவமும்
நேர்த்தியும் நாசூக்கும்
நிச்சயம் தேவைப்படுகின்றன
அடுத்தவர் விரும்பும்படி
டி போடவும்
2 comments:
தேநீர் ஆக்கவும்
தகுதி வேண்டும்
தேநீர் சுவைக்கவும்
தரம் வேண்டும்
உண்மைதான் .நன்றி
Post a Comment