Tuesday, 20 July 2021

Coffee with Sasi

அதிகமா பாக்கல ஒரு episode தான் .

திமுக ஆட்சி கொஞ்சம் செட்டில் ஆகி அந்த பரபரப்பு குறைஞ்சிருக்க நேரத்துல நல்ல டைமிங் தான் .

ஆனா நமக்கு பாக்க கொஞ்சம் கோட்டை விட்ட மாதிரி தெரியறதால சிலபல இலவச அறிவுரைகள் (பிளாக்ல வேற போஸ்ட் எழுதி நாளாகுது )

ப்ளஸ் 

டைமிங் 

ஜெவோட சில போட்டோஸ் /விடீயோஸ் 

சில பல தனிப்பட்ட உரையாடல்கள் 

அந்த backdrop -சுவர் முதல் vase வரை 💓💓💓


மைனஸ் 

அந்த புடவை -ஜெ ஆரம்பத்துல கட்டின garden vareli போல (மெட்டீரியல் கிழியவே கிழியாது )-சென்டிமெண்ட் ?நல்ல அடர்வா  சின்ன பார்டர் வச்ச பட்டுப்புடவை கட்டியிருக்கலாம்  .கெத்தா இருந்திருக்கும் .

பிளவுஸ் - கண்ணாம்பா காலத்து மெட்டிரியல் .

அந்த ஹேர்ஸ்டைல் - சரியாக condition  செய்யப்படாத முடி லூசா விடவோ /போனி டெயில்க்கோ  சரிவராது .

அப்புறம் அந்த ஹேர் கலர் - மோசமான தரம் -ரொம்ப அடர் கருப்பு (கூந்தல் கருப்புனு வாத்தியாரே பாடியிருந்தாலும் வயசுக்கு  கொஞ்சம் வெள்ளை முடி அழகு )

ரொம்ப முக்கியமா சாய்ஸ் of anchor - யோசிக்காம கோபிய பிக்ஸ் பண்ணிருக்கலாம் .அவரு இயல்பா கேக்குற மாதிரி இருக்கும் .இயல்பா பேசுறப்ப கொஞ்சம் நல்லாவே தான் பேசுறாங்க .ஆனா  ஹரி பேச விடமாட்டேங்குறாப்பல .அதோட அவரோட நோட்ஸ் செக் பண்ணி அந்தம்மாவ ப்ராம்ப்ட்  பண்ணிட்டே  இருக்காப்ல -LKG பிள்ளைங்க ஸ்டேஜ்ல ஆடுறப்ப சைடுல ஆடுற டீச்சர் மாதிரி .கண்ணுல தண்ணி /கேரம் போர்ட் /கொடநாட்டில் குழந்தை இன்ன பிற .அதனாலேயே ரொம்ப rehearsedஆ தெரியுது .மொத்தத்துல சசி ஒரு terror /ஆளுமை /குயின் மேக்கர்ங்கற இமேஜ் டோட்டல் டேமேஜ் .

டவுட்ஸ் 

இந்த பேட்டி இவங்கள   ஆளுமையா establish பண்ற மாதிரி தெரியல .அப்ப இதோட நோக்கம் சிம்பதியா ?

அதோட இன்னும் என்னெல்லாம் வீடியோ வச்சிருக்காங்களோ?

இத்தனை வருஷத்துல ஜெயலலிதாவோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ கூட இவங்க  கத்துக்கலையே வேற எத கத்துக்கிட்டு இருக்கப்போறாங்க ?




Wednesday, 2 June 2021

எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் 

எங்கே தேடுவேன் 

வேக்சினை எங்கே தேடுவேன் 

கொரோனா தடுக்க 

உதவும் வேக்சினை 

எங்கே தேடுவேன் 

18 வயது முதல் அனைவர்க்கும்

தேவைப்படும் வேக்சினை 

எங்கே தேடுவேன்  


பாரத் பயோடெக்கில் சிக்கிக் கொண்டாயோ 

சீரம் இன்ஸ்டிட்யூட்டில் குடிப்  புகுந்தாயோ 

வேக்சின் பாலிசியில் கிறுகிறுத்தாயோ 

ஒன்றிய அரசிடம் இல்லாத வேக்சினை 

எங்கே தேடுவேன் 


அண்டை நாடுகளில்  டோஸ்கள் ஆனாயோ 

கார்ப்பரேட் கைகளில் ஹோர்டிங் ஆனாயோ 

பிராமின் கேம்ப்புகளில் குடிப்புகுந்தாயோ 

மாட்டு மூத்திரத்தில் கரைந்து போனாயோ 

எங்கே தேடுவேன் 


குஜராத் மாடலில் மறைந்து கொண்டாயோ 

பிகார் மாடலில் பெருகிப்போனாயோ

உத்தர பிரதேசத்தில் தேடப் போனாயோ 

கங்கையில்  புண்ணியமாய் மிதந்து போனாயோ 

எங்கே தேடுவேன் 


தேர்தல் பரப்புரையில் தேய்ந்து போனாயோ 

தாடியில் சிக்கி தொலைந்து போனாயோ 

cowin ஆப்புகளில் கலங்கிப்போனாயோ 

ஆன்டி வாக்சர்ஸால் அழிந்து போனாயோ 

எங்கே தேடுவேன் 



நன்றி 

கலைவாணருக்கும் கவியரசருக்கும் மெல்லிசை மன்னர்களுக்கும் 


https://youtu.be/LUzOsShOKjQ


Monday, 31 May 2021

ஏக்கம்

அந்த அழகி இருந்தபோது ,

பூக்களால் நிறைந்திருந்தது அறை 

அவள் போய் விட்டாள் ,காலியாக கிடக்கிறது  படுக்கை 

பூ தைத்த  கம்பளி சுருட்டிக்கிடக்கிறது படுக்கையில்  

ஒருவரும் தூங்குவதில்லை 


மூன்று வருடங்கள் போய்விட்டன 

அந்தவாசம் இன்னமும்  இருப்பதாக முகர்கிறேன் 

அந்த வாசம் முடிந்துவிட்டது, அழியவில்லை .

அவள் போனாள் ,வருவதில்லை .

ஏக்கம் ,விழும் இலையை பழுக்க வைக்கிறது .

வெள்ளைப்  பனி கோர்க்கிறது பச்சை புல்லை.


Long yearning 

By Li Po 


When the beautiful woman was here, the hall was filled with flowers,

Now the beautiful woman's gone, the bed is lying empty.

On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,

Though three years have now gone by, I think I smell that scent.

The scent is finished but not destroyed,

The woman's gone and does not come.

Yearning yellows the falling leaf,

White dew beads the green moss.


பூக்கள்


குழந்தைகள் சலித்துவிட்டதாக

சொல்லிக்கொள்பவர்களுக்கு 

பூக்கள் இல்லை 


For those who proclaim

they've grown weary of children,

there are no flowers

 By Basho

Sunday, 30 May 2021

கதையல்ல நிஜம்

டெங்கி தமிழ்நாட்டில பரவல்ல இருந்த நேரம்.அரசு பெரிய அளவுல நிலவேம்பு குடிநீரை பரபரப்பா கொடுத்திட்டிருந்தாங்க .ஒரு  பிரபல  தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க .அவங்க வழக்கமான பேனல் தான் .அவங்க அரசியல் விமர்சகர் /டாக்டர் ,பிரபல சித்த மருத்துவர் ,அதிமுக சார்பில ஒரு டாக்டர் ,நான் .

உள்ள போனதுமே நெறியாளரும் சித்த மருத்துவரும் ,"நாம இந்த ஆங்கில மருத்துவத்த அடிச்சி பேசிறனும்"னு பேசிக்கிட்டாங்க .நிகழ்ச்சி வழக்கமான வகையில ,ஆனா பேசுறதுக்கே  சொற்ப நேரமே கொடுத்தாங்க .எப்ப பேசினாலும் சித்த மருத்துவர் இடைமறிச்சி பேசிக்கிட்டே இருந்தாரு .நெறியாளரும் தடுக்கல .

அப்ப டிவிட்டர்ல யாருக்கும் நான் தான் அந்த நிகழ்ச்சியில பங்கேற்ற டாக்டர்ன்னு தெரியாது .இங்கே பிரபல ட்வீட்டர்கள் பலரும் நிலவேம்பு குடிநீருக்கு ஆதரவா ஆக்ரோஷமா களமாடிட்டு இருந்தாங்க .அதிலேயும் ஒருத்தர் அல்லோபதி டாக்டர்களுக்கு அவங்க களமோ என்னவோ சொன்னாரு பறிபோயிடும்ங்கற பயம் நல்லாவே தெரிஞ்சதுனு சொன்னாரு .அப்புறம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாளில்லை டைப் விவாதங்கள் வேற .நானும் ரெண்டு மூணு ட்வீட் போட்டுட்டு கடந்து போய்ட்டேன் .

போன வருஷம் கொரோனா வந்தப்ப இப்படித்தான் கபசுர குடிநீர் அறிமுகம் ஆச்சு  .என்ன டோஸ் எத்தனை நாளைக்கு குடிக்கனும் எத்தனை நேரம் குடிக்கனும்ங்கிற எந்த தெளிவும் இல்ல .அவங்கவங்க அவங்கவங்க இஷ்டம் போல பயன்படுத்திட்டிருந்தாங்க/ இருக்காங்க . இப்ப கபசுர குடிநீர் ,கிராம்பு ,இஞ்சி ,மஞ்சள் ,வேப்பிலை அப்புறம் ஒரு நாள்ல்ல கணக்கில்லாத  முறை ஆவி பிடிக்கறதுனு  நோய் தீவிரமானதுக்கு அப்புறம் மருத்துவமனைக்கு வரவங்களுக்கு  என்ன சொல்றது ?

மக்களை குறை சொல்லி பலனில்ல .இதுக்கு பின்னால ஊடகங்களும் இருக்கு .சித்த மருத்துவர்களும் எந்த ஒரு அறிவியல் வட்டத்துக்குள்ள வர மறுத்து ,ஒரு ஒளி வட்டத்தோடயே வலம் வராங்க .நாங்க இதுக்கு தரவு இல்ல ,இப்ப புது ஆய்வு இது வேலைப்பாக்காதுனு  தெளிவா உள்ளத உள்ளபடியே சொல்றோம் ,ஆனா அதுல  எல்லாருக்கும் ஆயிரம் சந்தேகம் வருது .

இதுக்கு எல்லா நிலையிலேயும்  science சார்ந்த புரிதல கொண்டு வரணும் .ஒரு இயந்திரம்  பழுதானா  பெரும்பாலும்  பணமோ நேரமோ தான் இழப்பாகும் .ஆனா மருத்துவம் அப்படியில்ல .அதனால தான் மருத்துவர்கள் இத்தனை மதிக்கப்படுறாங்க .அதனாலேயே  அவங்களுக்கும் மக்கள் நலனிலேயும் அவங்க சரியான  சிகிச்சையை செஞ்சுக்க வழிகாட்டுறதிலேயும் பெரிய பொறுப்பு இருக்கு .